1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By papiksha joseph
Last Updated : புதன், 28 ஜூன் 2023 (16:50 IST)

கணவரின் தகாத உறவு உண்மையா? விவகாரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த அசின்!

தமிழில் முன்னனி நாயகியாக வலம் வந்த நடிகை அசின், பாலிவுட் கனவு கண்ணியாக வேண்டும் என்று மும்பை சென்றார். ஆனால் அவர் நினைத்தது போல் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அவருக்கு பணக்கார மாப்பிள்ளை ராகுல் சர்மாவே கிடைத்தார்.
 
பிரபல இந்தி நடிகரான அக்ஷய் குமாரின் நெருங்கிய நண்பரான ராகுல் ஷர்மாவை அசின் விமான நிலையத்தில் தான் முதன் முதலில் சந்தித்தாராம். ஆம், ஹவுஸ்புல் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக,   நடிகர் அக்‌ஷய்குமாரோடு வெளிநாடு சென்ற அசின் அங்கு ராகுல் சர்மா பார்த்துள்ளார். ராகுல் சர்மாவுக்கு உடனே காதல் வர பின்னர் அசினின் வீட்டிற்கு வந்து பெண் கேட்டுள்ளார். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் 2016ம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு ஆரின் என்ற 6 வயது மகள் இருக்கிறார். 
 
இப்படியான நேரத்தில் அசினுக்கும் அவரது கணவர் ராகுல் ஷர்மாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், ராகுல் ஷர்மா வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக அசினுக்கு தெரிய வர அதனால் கணவரை விவாகரத்து செய்யும் முடிவில் இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி ரசிகர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அசினுக்கே இப்படி ஒரு நிலைமையா? என ரசிகர்கள் வருந்திய நிலையில் தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ளார் அசின். 
 
அந்த பதிவில், “ கோடை விடுமுறையில் குடும்பத்துடன் காலை உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது, இந்த கற்பனையான, கொஞ்சம் கூட நம்பமுடியாத செய்தியைப் பார்த்து சிரித்தோம். இது எப்படி இருக்கிறது என்றால்....  நாங்கள் எங்கள் குடும்பத்துடன் அமர்ந்து எங்கள் திருமணம் குறித்து திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது, எங்களுக்கு ‘பிரேக் அப்’ ஆகிவிட்டதாக வந்த செய்தியை தான் நியாபகப்படுத்துகிறது. விடுமுறையில் 5 நிமிடத்தை வீணாக்கியதற்காக வருந்துகிறேன். Pls do Better" என்று பதிவிட்டு விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.