1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : வியாழன், 25 ஜூலை 2019 (16:54 IST)

"பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிய விஜய் படம் ட்ராப்" - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான விஜய் தேவர்கொண்டா தமிழ், தெலுங்கு இந்தி என பல  மொழி சினிமா ரசிகர்களுக்கு பேவரைட் நடிகர். சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே ஏகோபித்த ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துவிட்டார். 


 
அர்ஜுன் ரெட்டியில் வேகமெடுத்து இவரது திரைப்பயணம் அடுத்து தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்ககளில் நடித்து புகழ் பெற்று வளர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது அவர் நடித்துள்ள டியர் காம்ரேட் படம் வரும் ஜூலை 26 ல் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். 
 
அதையடுத்து  பைக் ரேஸ் வீரராக "ஹீரோ" என்ற படத்தில் நடித்து வந்த விஜய் தேவர்கொண்டவிற்கு ஜோடியாக அர்ஜுன் ரெட்டி புகழ்  ஷாலினின் பாண்டே மற்றும் மாலினி மோஹனன் ஆகியோர் நடித்து வந்தனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ரூ 15 கோடி செலவில் எடுக்கப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது அந்த படக்காட்சிகள் எதிர்பார்த்தது போல வரவில்லை என்றும் படத்தின் இயக்குனர் ஆனந்த் அண்ணாமலை படைப்பில்  தயாரிப்பு நிறுவனத்திற்கு திருப்தி இல்லாத காரணத்தால் படத்தை கைவிடுதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது. இதனால் விஜய் தேவர்கொண்டாவின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.