ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 21 மே 2019 (09:08 IST)

விக்ரமுக்கு வார்னிங் நோட்டீஸ்: இயக்குனர் பாலா லீகல் அட்டாக்!

நடிகர் விக்ரமுக்கு ஆதித்யா வர்மா படம் தொடர்பாக இயக்குனர் பாலா வக்கில் நோட்டீஸ் ஒன்று அனுப்பியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
நடிகர் விகரம் கோலிவுட்டில் இப்போதும் முன்னணி நடிகராக இருப்பவர். இவர் தனது படங்கள் மீது மட்டும் கவனம் செலுத்தாமல், தனது மகன் துருவ் விக்ரமின் அறிமுக படமான ஆதித்யா வர்மா மீதும் கவனம் செலுத்தி வருகிறார். 
 
தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி ரீமேக்கான இந்த படத்தை முதலில் இயக்குனர் பாலா, வர்மா என்ற பெயரில் இயக்கி முடித்தார். ஆனால், படம் தயாரிப்பு தரப்பை அதிருப்தியாக்கியதால் வர்மா வெளியாகாமல் குப்பையில் போடப்பட்டது. 
தற்போது இந்த படம் மீண்டும் ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய இயக்குனரின் உதவியாளர் இயக்கி வருகிறார். 
 
இந்நிலையில் இயக்குனர் பாலா, நடிகர் விக்ரமுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தற்போது உருவாகி வரும் ‘ஆதித்யா வர்மா’ படத்தில் நான் இயக்கிய ‘வர்மா’ பட காட்சிகள் எதுவும் இருக்கக்கூடாது என்று பாலா எச்சரித்து இந்த வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. 
 
அர்ஜுன் ரெட்டில் படத்தின் இந்தி ரீமேக்கான கபீர் சிங் படமாக்கப்பட்ட விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.