வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 28 ஜூலை 2020 (20:21 IST)

சின்ன வயசு போட்டோ வெளியிட்ட ஆல்யா பட்டிற்கு குவியும் நட்சத்திர நடிகர்களின் கமெண்ட்ஸ்!

பாலிவுட் சினிமாவின் தற்போதைய டாப் நடிகையான ஆல்யா பட் பிரபல தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகள். தந்தை உதவியுடன் சினிமாவில் நுழைந்த ஆல்யாவிற்கு தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டனர். இவரது அம்மா சோனி ரஸ்தான் பாலிவுட்டின் டாப் நடிகையாக வலம் வந்தவர்.

நட்சத்திர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஆல்யாவிற்கு சினிமாவில் தொட்டதெல்லாம் ஹிட் என்கிற அளவுக்கு பாலிவுட்டில் மாபெரும் இடத்தை அடைந்தார். 2012ல் வெளியான Student of the Year  என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுமார் 8 வருடங்களில் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் சிறுவயது புகைப்படமொன்றை பதிவிட்டு " அன்பை பகிருங்கள்" என கேஷப்ஷனுடன் வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோவிற்கு தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஹிருத்திக் ரோஷன் , பிபாஷா பாஸு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கமெண்ட் செய்துள்ளனர்.  எப்போதும் இல்லாத அளவிற்கு ஒன்றுகூடி நட்சத்திரங்கள் கமெண்ட் செய்துள்ளததால் நட்சத்திர குழந்தை ஆல்யாவிற்கு பாலிவுட்டில் இத்தனை கூட்டமா...? என  வாய்பிளந்து வருகின்றனர் இணையவாசிகள். இது போல்  ஒன்று இரண்டு பேராவது சுஷாந்த் மீது அன்பு காட்டியிருந்தால் அவர் நம்மை விட்டு போயிருக்கமாட்டார் என உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

spread some love