செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 2 ஜூலை 2020 (13:37 IST)

ஆல்யா பட் வீட்டில் தண்ணி குடிக்க வந்த பாம்பு - வீடியோ

பாலிவுட் சினிமாவின் தற்போதைய டாப் நடிகையான ஆல்யா பட் பிரபல தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகள். தந்தை உதவியுடன் சினிமாவில் நுழைந்த ஆல்யாவிற்கு தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டனர். இவரது அம்மா சோனி ரஸ்தான் பாலிவுட்டின் டாப் நடிகையாக வலம் வந்தவர்.

இந்நிலையில் நடிகை ஆலியா பட்டின் வீட்டில் பாம்பு ஒன்று நுழைந்து அங்குள்ள நீச்சல் குளத்தில் தண்ணீர் குடித்துவிட்டு பின்னர் அந்த குளத்திலே ஒரு குட்டி குளியல் போட்டுவிட்டு புதருக்குள் சென்றுள்ளது. இந்த வீடியோவை " இன்று எங்கள் வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்திருக்கிறார்" என கேப்ஷன் கொடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் ஆல்யாவின் தாயார் சோனி ரஸ்தான்.

ஆல்யா வீட்டின் நீச்சல் குளத்தில் சுற்றி விளையாடும் பாம்பின் இந்த வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறது. ராஜமௌலி இயக்கத்தில் RRR படத்தில் ஆல்யா பட் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.