1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 15 ஜூலை 2020 (08:17 IST)

நிஜ வாழ்க்கையில கூடவா இப்படி நடிப்பீங்க...? சேறு பூசிய சல்மான் கானை கண்டம் செய்த நெட்டிசன்ஸ்!

பாலிவுட் சினிமாவின் மிகப்பெரும் ஆளுமை கொண்ட நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து நட்சத்திர நாயகனாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். வெற்றி ஏற்றவாறு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாகி வரும் சல்மான் கானிற்கு தற்ப்போது 54 வயது ஆகிறது.

திருமணம் செய்துகொள்ளாமல் குடும்ப வாழ்க்கை குறித்து சற்றும் யோசிக்காமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். படங்களில் நடிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது , படங்களை தயாரிப்பது என பிஸியான இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது கொரோனா ஊரடங்கில் படம் சம்மந்தப்பட்ட எந்த வேலைகளும் இல்லாததால் தனது பண்ணை வீட்டில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது தோட்டத்தில் விவசாயம் செய்துவிட்டு உடல்முழுக்க சேறு படிந்திருக்கும் போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு, " விவசாயிகளுக்கு சலியூட் அடித்துள்ளார்.

இந்த புகைப்படம் தான் நேற்றிலிருந்து ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. உடலில் சேறு வாரி பூசி கொண்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளது அப்பட்டமாக தெரிவதாக இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர். மேலும், நிஜமான விவசாயிகள் வேலை செய்யும் போது கூட அவர்களது உடம்பில் இப்படி சேறு படியாது... மகா நடிப்புடா சாமி... படத்துல தான் நடிக்குறீங்கன்னு பார்த்தால் நிஜ வாழ்க்கையில் கூடவா இப்படி பொய்யாக இருப்பீங்க என  கிண்டலடித்து கலாய்த்துத் தள்ளியுள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Respect to all the farmers . .

A post shared by Salman Khan (@beingsalmankhan) on