ரசிகர்களிடம் திட்டு வாங்கி நடிகை.. சமூக வலைதளத்தில் இருந்து விலகல்
சில நாட்களுக்கு முன் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது இந்தியாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இதற்குக் காரணம் பாலிவுட்டில் உள்ள நட்சத்திர வாரிசுகள் என பலரும் விமர்சித்தனர். இதில், சல்மான் கான் , ஷாருக்கான், கரண்ஹோகர், ஆலியபட் ஆகியோரின் பெயர்கள் பலமாக அடிபட்டன.
இந்த நிலையில், சோனம் கபூர் தனது தனது டுவிட்டர் கணக்கை விட்டு வெளியேறியுள்ளார். நடிகர் அனில் கபூரின் மகளான இவர், சமீபத்தில் தந்தையர் தினத்தை முன்னிட்டு ஆணவம் தொனிப்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியாகத் தெரிகிறது.
இதனால் ரசிகர்களும் நெட்டிசன்களும் வெகுண்டனர். அவர் அந்தப் பதிவில் என் தந்தை எனக்கு இவ்வளவையும் தருவதற்காக கடுமையாக உழைத்துள்ளார். நான் யாருக்கு மகளாக பிறக்க வேண்டும் எனபது கர்மா.. அதனால் நான் பெருமைப்படுகிறேன்… இதனை யாரையும் அவமானப் படுத்துவதற்காக கூறவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இதனால் கடுப்பான நெட்டிசன்ஸ் நீங்கள் நடிகருடைய மகளாக இருந்தாலும் ராசியில்லாத நடிகை என்று பெயர் எடுத்ததும் கர்மா தான் என விமர்சித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.