வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. யோகா
  3. ஆசன‌ங்க‌ள்
Written By Sasikala

ருத்ர முத்திரை செய்வதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டாகும்...?

யோக முத்திரைகளில் மிகவும் சக்தி வாய்ந்தது ருத்ர முத்திரை. வயதானவர்களுக்கு ருத்ர முத்திரை ஒரு வரம் என்றே சொல்லலாம்.

செய்முறை:
 
விரிப்பில் கிழக்கு திசை நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். உங்களது முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
 
கண்களை மூடி ஒரு நிமிடம் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்ளிழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடவும். மூச்சை வெளியிடும்போது நமது உடல், மனதிலுள்ள அழுத்தம், டென்ஷன் உடலைவிட்டு வெளியேறுவதாக எண்ணவும்.
 
கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல்களின் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். நடுவிரலும் சுண்டுவிரலும் நீட்டி இருக்க வேண்டும். நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து, கால்களைத் தரையில் பதித்தோ, விரிப்பின் மீது சப்பளங்கால் போட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்தோ, 10 முதல் 40 நிமிடங்கள் வரை  செய்யலாம்.
 
பலன்கள்:
 
* சோர்வு, களைப்பு, தலைசுற்றல் உணர்வு, வயோதிகத்தில் ஏற்படும் கிறக்கம் ஆகியவற்றைச் சரிசெய்யும். உடலுக்கு ஆற்றலைத் தரும்.
 
* தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். நினைவாற்றல், கவனம் அதிகரிக்கும்.
 
* பார்வைத்திறனைக் கூர்மைப்படுத்தும். ரத்த அழுத்தப் பிரச்சனை, சுவாசப் பிரச்சனைகளைச் சீர்செய்யும்.
 
* மன அழுத்தத்தால் ஏற்படும் இறுக்கம், கழுத்து, முதுகு, இடுப்பு மற்றும் மார்பக வலி ஆகியவற்றை இந்த முத்திரை குறைக்கும்.
 
* ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள், கட்டிகள் ஆகியவற்றைச் சரிசெய்யும்.
 
வயோதிகத்தில் ஏற்படும் நினைவாற்றல் பாதிப்பு நோய்களான நடுக்குவாதம், அல்சைமர் பாதிப்பு உள்ளவர்கள் மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவர முன்னேற்றம்  காணலாம்.