திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (09:11 IST)

“என்னுடைய செக்ஸ் வாழ்க்கை அவ்வளவு சுவாரஸ்யமானதில்லை…” கரண் ஜோஹரைக் கலாய்த்த டாப்ஸி!

பிரபல நடிகையான டாப்ஸி தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அடுத்து அவர் நடித்துள்ள திரைப்படம் ஒன்று ரிலீஸ் ஆக உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நடிகை டாப்ஸி “ஆடுகளம்” மூலமாக தமிழில் அறிமுகமானார். பின்னர் பல மொழி படங்களில் நடித்து வந்த அவர் தற்போது இந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். பல தரமான படங்களைக் கொடுத்து வரும் டாப்ஸி சமீபத்தில் நடித்த சபாஷ் மிது திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர்ந்து அவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார்.

இதையடுத்து அனுராக் காஷ்யப் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் ரிலீஸ் வேலைகளில் இருக்கும் அவரிடம் “படத்தின் ப்ரமோஷனுக்காக நீங்கள் ஏன் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை” எனக் கேட்கப்பட்ட நிலையில் “அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அளவுக்கு என்னுடைய செக்ஸ் வாழ்க்கை சுவாரஸ்யமானதில்லை” என்று அந்த நிகழ்ச்சியை கேலி செய்துள்ளார்.

காஃபி வித் கரண் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக பல சீசன்களாக ஒளிபரப்பி ஆகி வருகிறார். பிரபல இயக்குனராக கரண் ஜோஹர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். வரும் பிரபலங்களிடம் அவர்களிடம் செக்ஸ் வாழ்க்கையைப் பற்றி வலிந்து பேசி முகம்சுளிக்கும் விதமாக கரண் நடந்துகொள்கிறார் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சமீபத்தில் கலந்துகொண்ட அமீர் கான் கூட “ஏன் இப்படி எப்போதும் செக்ஸ் சம்மந்தமான கேள்விகளையே கேட்கிறீர்கள்” என கேட்டது கவனம் பெற்றது. அதையடுத்து இப்போது டாப்ஸியின் இந்த கமெண்ட் மேலும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.