வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 31 ஜூலை 2023 (10:01 IST)

”வந்த இடம்” ஜவான் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று..! – இந்தியில் கலக்குவாரா அனிருத்?

Jawan
தமிழ் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகிறது.



பிரபல ஹிந்தி ஸ்டார் நடிகர் ஷாரூக்கான் நடித்து இயக்குனர் அட்லீ இயக்கியுள்ள படம் ஜவான். இந்த படத்தில் நயந்தாரா, விஜய் சேதுபதி என முன்னணி தமிழ் நடிகர்களும் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் மூலம் இந்தியிலும் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் அனிருத்.

தமிழ் இயக்குனர், நடிகர்கள், இசையமைப்பாளர்கள் என பெரும்பாலும் கோலிவுட்டின் பங்களிப்பு இருப்பதால் இந்த படம் தமிழ் ரசிகர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபமாக அனிருத் இசையமைத்துள்ள ஜெயிலர், லியோ என அனைத்து பட பாடல்களும் தமிழில் செம ஹிட்.

இந்நிலையில் இன்று மதியம் 12.50 மணியளவில் ஜவான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “வந்த இடம்” ரிலீஸாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் வெளியாக உள்ள இந்த பாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் முன்னணி நாயகர்கள் படங்களில் கலக்கி வரும் அனிருத் இந்தியிலும் சாதிப்பாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Edit by Prasanth.K