அஜித் - விஜய் ரசிகர்கள் சண்டைக்கு மத்தியில் அந்த 19 ஆயிரத்தை கவனித்தீர்களா? - ட்விட்டர் டிரெண்டிங்

tweeter trend
Last Modified புதன், 9 அக்டோபர் 2019 (12:28 IST)
மீண்டும் ட்விட்டர் டிரெண்டிங்கில் அஜித் விஜய் சண்டை முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

சந்திரயான்-2ல் ஏற்பட்ட பின்னடைவு சமயத்தில் விஜய் அஜித் ரசிகர்கள் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக #WorthlessPakistan என்ற ஹாஷ்டேகை சர்வதேச அளவில் டிரெண்ட் ஆக்கினர்.ஆனால், ஒரே மாதத்தில் இரு தரப்பும் மீண்டும் சண்டையில் இறங்கி உள்ளது.

இன்று (புதன்கிழமை) காலை 7.30 மணி நிலவரப்படி ட்விட்டரில் #LiveAndLetLiveInAJITHWay முதல் இடத்தில் #EndrumVIJAYannanValiyil என்ற ஹாஷ்டேக் நான்காவது இடத்திலும் சென்னை டிரெண்டிங்கில் இருந்தன

இப்போது செய்தி இது குறித்தல்ல.

இந்த இருவரின் ரசிகர்கள் சண்டைக்கு மத்தியில் Rs 19,000 என்ற ஹாஷ்டேக் ட்விட்டர் டிரெண்டிங்கில் 9வது இடத்திலிருந்தது.
என்ன அது #Rs 19000?

அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் இணையதளங்கள் அண்மையில் சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்தன.


vijay
 
அந்த ஆறு நாள் தள்ளுபடி விற்பனையில் மட்டும் ஏறத்தாழ 19 ஆயிரம் கோடி ரூபாய்க்குப் பொருட்கள் விற்பனை ஆகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜியோமி நிறுவனம் மட்டும் 38 லட்சம் ஸ்மார்ட் ஃபோன்களை விற்பனை செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.இந்த விற்பனை தரவுகளை அதரமாகக் காட்டி, "பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. அதனால் மக்களால் உள்ளாடை வாங்க முடியவில்லை, பிஸ்கட் வாங்க முடியவில்லை என்று சொன்னீர்களே? எங்கே நிலவுகிறது மந்தநிலை" எனப் பலர் ட்விட்டரில் கேள்வி எழுப்பி உள்ளனர்.


ajith

இந்தியாவில் பொருளாதார மந்தநிலை என்பது எதிர்க்கட்சிகள் பரப்பிய வதந்தி எனப் பலர் Rs 19,000 என்ற ஹாஷ்டேக்கின் கீழ் கருத்து பதிந்துள்ளனர்.

amazonஇதற்கு மத்தியில் மீண்டும் அக்டோபர் மாதம் 13 - 17 நாட்களில் தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது அமேசான்.

amazon

 

இதில் மேலும் படிக்கவும் :