கென்யாவில் கோலாகலமாக நடக்கும் காளை சண்டை

Last Updated: திங்கள், 10 ஜூன் 2019 (18:21 IST)
கென்யாவின் மேற்குப் பகுதியிலுள்ள லுஹ்யா சமுதாயத்தை சேர்ந்த மக்களிடையே காளை விளையாட்டு என்பது பாரம்பரியமாக இருந்து வருகிறது.
 
அதாவது, இறுதிச்சடங்குகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை குறிக்கும் வகையிலும் இங்கு காளை விளையாட்டு நடத்தப்படுவதுண்டு. மிகவும் போட்டி மிக்க தொழிலாக இருப்பது மட்டுமின்றி, சில நேரங்களில் லாபகரமானதாகவும் இது பார்க்கப்படுகிறது.
 
டன்கன் மூரே எனும் புகைப்பட கலைஞர் கென்யாவின் மேற்குப் பகுதியிலுள்ள 'ககமேக' எனும் கிராமத்திற்கு சென்று, அங்குள்ள மக்கள் காளை விளையாட்டை பிரதான மற்றும் சட்டப்பூர்வ விளையாட்டாக மாற்றுவதற்கு எப்படி தொடர் போட்டிகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்பதை பதிவு செய்துள்ளார்.
 
தமிழ்நாட்டை போலன்றி சாதாரண விவசாய நிலங்களிலேயே இங்கு காளைகள் சீறிப் பாய்கின்றன.

இதில் மேலும் படிக்கவும் :