செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 17 அக்டோபர் 2022 (17:31 IST)

யுக்ரேன் போர்: ரஷ்யாவிடம் ஆயுதங்கள் தீர்ந்துவிட்டதா?

Ukraine war
யுக்ரேன் மீது அடுத்தடுத்த தொடர் தாக்குதல்களை ரஷ்யா நடத்திய நிலையில், ரஷ்யாவுக்கு ஆயுதப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக சில பாதுகாப்பு வல்லுநர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.


சமீபத்திய நாட்களில் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்களை அதிகப்படுத்தியிருந்தது. இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் குறித்து தற்போது பல கேள்விகள் எழுந்துள்ளன.

தரை இலக்குகளைத் தாக்குவதற்கு, தரையிலிருந்து வான் நோக்கிப் பாயும் ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்துவதை ஆயுதப் பற்றாக்குறையின் அறிகுறியாக பாதுகாப்பு வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

"சமீபத்திய தாக்குதல்களில் தரை இலக்குகளுக்கு எதிராகப் பல்வேறு ஏவுகணைகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டிருப்பது கவனிக்கத்தக்க விஷயம்," என்கிறார் சர்வதேச வியூக ஆய்வுகள் நிறுவனத்தின் ராணுவ நிபுணரான டக்ளஸ் பாரி.