ஈராக்கில் 200க்கும் அதிகமான மனித புதைக்குழிகள், ஆயிரக்கணக்கான உடல்கள் கண்டெடுப்பு
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துகொள்ளும் குழுவினர் கட்டுப்பாட்டில் முன்பு இருந்த ஈராக் பகுதிகளில் 200க்கும் அதிகமான மனித புதைக்குழிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான உடல்கள் உள்ளதை ஐநாவின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
நினிவே, கிர்குக், சலாவுதீன் மற்றும் அன்பார் போன்ற மேற்கு பகுதி ஆளுநரகங்களில் இந்த கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 12 ஆயிரம் பேர் இந்த மனித புதைக்குழிகளில் இருக்கலாம் என்று ஐநா அறிக்கை குறிப்பிடுகின்றது.