வரலாற்று பதிவாக அதிக தொகைக்கு விற்கப்பட்ட சித்திரக்கதை


லெனின் அகத்தியநாடன்| Last Modified ஞாயிறு, 20 நவம்பர் 2016 (11:50 IST)
துப்பறியும் சிறுவன் டின்டின்னை சித்தரிக்கும் ஒரு சித்திரக்கதை, 1.6 மில்லியன் டாலர் தொகைக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. சித்திரக்கதை வடிவத்தில் அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ள புதிய வரலாற்று பதிவை இது ஏற்படுத்தியுள்ளது.

ஹெர்ஜ் என்று அறியப்படும் பெல்ஜிய சித்திரப்பட கலைஞரின் தலைசிறந்த படைப்பு

சீன மையில் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ள இதன் அசல் தட்டு, 1954 ஆம் ஆண்டு வெளியான "எக்ஸ்புளோர்ரஸ் ஆன் த மூன்" என்ற கதை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

"திபெத்தில் டின்டின்" என்ற கதை தொகுப்போடு ஜார்ஜஸ் ரெமி என்ற இயற்பெயரை கொண்ட ஹெர்ஜ் என்று பரவலாக அறியப்படும் பெல்ஜிய சித்திரப்பட கலைஞரின் தலைசிறந்த படைப்பாக இது உள்ளது.

சனிக்கிழமை அன்று விற்கப்பட்ட இந்த சித்திக்கதை டின்டின், ஸ்னோயி என்று பொருள்படும் அவனது நாய் மிலூ மற்றும் நண்பர் கேப்டன் ஹெடுடோக் ஆகியோர் விண்வெளி ஆடை அணிந்து நிலவில் நடப்பதை காட்டுகிறது.

இன்னொரு காட்சியில் தொலைவில் இருக்கிற பூமியை ஆச்சரியத்துடன் அவர்கள் பார்ப்பதை காட்டுகிறது.

இதில் மேலும் படிக்கவும் :