வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வியாழன், 3 ஜூன் 2021 (14:03 IST)

இரான் கடற்படையின் மிகப்பெரிய கப்பல் ஓமன் வளைகுடா கடல் பகுதியில் தீப்பிடித்து மூழ்கியுள்ளது

இரான் கடற்படையின் மிகப்பெரிய கப்பல் ஒமன் வளைகுடா கடல் பகுதியில் தீப்பிடித்து மூழ்கியுள்ளது.

இரானிய ஊடக தகவல்களின்படி, கார்க் என்ற அந்த கப்பலில் இருந்த மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
 
தீப்பிடித்த கப்பல் தொடர்பான மற்ற விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. அதே சமயம், சம்பவம் நடந்த பகுதி மிகவும் நுட்பமானதாக அறியப்படுகிறது.
 
இரானுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய ஆண்டுகளாக நிலவிய பதற்றங்களின் மையப்பகுதியாக அந்த இடம் கருதப்படுகிறது.
 
இரானும் இஸ்ரேலும் கடந்த மாதங்களாகவே தங்களின் கப்பல்கள் தாக்கப்படுவதாக பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.