திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 19 அக்டோபர் 2021 (14:32 IST)

இலங்கை கப்பல் மோதியதில் நடுக்கடலில் தமிழக மீன்பிடி படகு மூழ்கிய ஒருவர் மாயம்

இலங்கை கடல் பகுதிக்குச் சென்ற தமிழக மீனவர் படகில் இருந்த மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கியதில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றொரு மீனவரின் கதி என்ன என்று தெரியவில்லை.

 
மீட்கப்பட்ட மீனவர்கள் முதலுதவி செய்யப்பட்ட பிறகு இலங்கை கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் சென்றார்களா அல்லது இலங்கை கடற்படை கப்பல் மோதி இவர்களின் படகு மூழ்கியதில் இந்த சம்பவம் நடந்ததா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
 
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தில் இருந்து சுமார் 118 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். இதில் ராஜேஸ்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் ராஜ்கிரன், சுகந்தன், சேவியர் ஆகிய மூன்று மீனவர்கள், மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், கடல் சீற்றம் காரணமாக அவர்களின் படகு திசை மாறி இலங்கை கடலுக்குள் சென்றபோது அவர்களின் கப்பல் மூழ்கியதாக கூறப்படுகிறது.
 
இதில் படகில் இருந்த மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கியதாகவும் அவர்களில் சுகந்தன், சேவியர் ஆகிய இருவரை மீட்ட இலங்கை கடற்படையினர் கடற்படை முகாமில் முதலுதவி செய்த பிறகு அவர்களை தற்போது வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடலில் மூழ்கியவரும் படகை ஓட்டியவருமான ராஜ்கிரனை இலங்கை கடற்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்த தகவல் இந்திய தரப்புக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.