செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (13:23 IST)

மாகாண அரசுடன் மோதல்: தலைமையகத்தை மாற்றும் டெஸ்லா!

உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா தனது தலைமையகத்தை மாற்ற உள்ளது. 
 
உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா தனது தலைமையகத்தை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருந்து டெக்சாஸ் மாகாணத்துக்கு மாற்ற உள்ளது என்று அந்த நிறுவனத்தின் தலைவர் ஈலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
 
கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள டெஸ்லா ஆலை ஒன்றின் கோவிட் நடவடிக்கைகள் தொடர்பாக டெஸ்லா நிறுவனத்துக்கும் மாகாண அரசுக்கும் உரசல் உண்டானது. கலிஃபோர்னியாவில் ஊழியர்களுக்கு குறைந்த விலையில் வீடுகள் கிடைப்பதும் கடினமாக உள்ளது என்று பங்குதாரர்களுக்கு மஸ்க் தெரிவித்துள்ளார்.