செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2022 (00:23 IST)

மகாபலிபுரத்தில் மோதும் ரஷ்யா - யுக்ரேன் - ஆனால், இது வேற மாதிரி

mahabalipuram
முதல் முறையாக என் சொந்த நிலத்தில் கால் வைத்தேன். நீங்கள் அங்கு பிறக்காதபோதும், அந்த உணர்வு அலாதியானது. "உங்களுக்குள் இருக்கும் சோகத்தை நீங்கள் உணரும் தருணம் அது" என்கிறார் சப்ரினா.
 
என் தந்தை பிறந்த இடத்தை பார்க்கும்போது மனமுடைந்து போனேன். எல்லாம் சிதிலமடைந்துள்ளன. ஏதும் மிச்சமில்லை.
 
அதேவேளை நீங்கள் டியாகோ கார்சியா தீவுக்குள் வேறொன்றைப் பார்க்க முடியும். அங்கே, அமெரிக்க கடற்படை வீரர்களின் நாய்களுக்காக எழுப்பப்பட்ட கல்லறைகள் அவற்றின் பெயருடன் பொறிக்கப்பட்டுள்ளன.
 
இதற்குப்பிறகுதான் முடிவெடுத்தார் சப்ரினா. கால்பந்து மூலமாக தங்கள் சமூகத்தை அடையாளப்படுத்த வேண்டும் என்று. ஆனால், தொடக்கத்தில் போதுமான அளவுக்கு வீரர்கள் கிடைக்கவில்லை. மெல்ல மெல்ல இந்த செய்தி பரவியதன் பின்பே அணி உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக விளையாடத்தொடங்கியுள்ளனர்.
 
சட்ட சிக்கல்களும்
கதைகளில் மட்டும் தாங்கள் கேட்டறிந்த தமது தாயகத்தை, கால்பந்து வடிவில் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது இந்த அணி. ஆனால், சட்ட சிக்கல்களும் சமயத்தில் எழுகின்றன.
 
 
சில வீரர்கள் அவ்வப்போது தூதரக நடவடிக்கை விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டு விடுவர். இவர்களுக்காக பணம் ஏற்பாடு செய்து ஒரு வக்கீலை வைத்து மீட்பது எங்கள் வழக்கமாக உள்ளது.
 
இது ஒரு ஓயாத போராட்டமாகவே உள்ளது என்கிறார் இந்த அணியின் பயிற்சியாளரான ஃபெர்ரர்.
 
2002 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி 1969 க்கும் 1982க்கும் இடையில் பிறந்த, சாகோஸ் மக்களுக்கு பிரிட்டிஷ் குடியுரிமை வழங்குவதற்கான வழிவகை செய்யபட்டது. மொரீஷஸில் இருந்த மோசமான வாழ்க்கையிலிருந்து மாற வேண்டி, ஏராளமானோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இங்கிலாந்து குடிமக்களாக மாறினர்.
 
டேமியன் ராம்சாமி 2006ஆம் ஆண்டு தன் 13 வயதில் மொரீஷஸுக்கு வந்தார். சாகோஸிலிருந்து அவரது தாத்தா வெளியேற்றப்பட்டா. சொல்லப்போனால், தன் பதின்பருவம் வரை தான் ஒரு சாகோஸ் குடிமகன் என்ற உண்மை கூட டேமியனுக்கு தெரியாது. சில ஆண்டுகாலம் லண்டனின் பல்வேறு அணிகளில் விளையாடிய டேமியன், பின்னர் சாகோஸ் தீவுகள் கால்பந்து குழுவில் சேர்ந்தார்.
 
என் மகனுக்கு சாகோஸ் பற்றி ஏதுமே தெரியாது
பிரிட்டிஷால் எப்படி வீழ்ந்தது என்றும் சாகோஸ் மக்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் அவர் தீவிரமாக பேசக்கூடியவர். அதுபோக, அந்த மக்களுக்கு பிரிட்டிஷ் அரசே பொறுப்பேற்று இழப்பீடும் விடுகளும் வழங்க வேண்டும் என்பதிலும் அவருக்கு நம்பிக்கை உண்டு.
 
டேமியனின் இந்த நம்பிக்கையை விட கவனிக்கத்தக்கது அவரது இந்த வார்த்தைகள்தான், "என் தாத்தாவுக்கு வயது இப்போது 82. அவர் இறக்கப்போகிறார். என் மகனுக்கு வயது 2. அவனது பதின்பருவத்தில் சாகோஸ் என்ற இடம் பற்றி அவர்களுக்கு ஏதுமே தெரியாது. அடுத்தடுத்த தலைமுறை வளர வளர, சாகோஸ் தீவுகள் மெல்ல மெல்ல மறைந்துவருகிறது"
 
"அது மறையாமல் இருக்க, இந்த உற்சாகத்தை தக்க வைக்க , இந்த கால்பந்து அணி மிக மிக முக்கியமானது"
 
ஏராளமான சாகோஸ் மக்களுக்கு தங்கள் தாயகத்துக்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணம் உண்டு. கால்பந்து அணியின் வீரரான செட்ரிக் ஜோசப் கூட தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் தான் சென்று விடுவேன் என்றே சொல்கிறார்.
 
அப்படி ஒரு வாய்ப்பு வரும்வரை, மைதானத்தில் தன் தாயகத்தை அடையாளப்படுத்துவதை, தொடர்ந்து பெருமையுடன் செய்வார் ஜோசப்.
 
"இதோ இந்தக் கையுறைகளில் எங்கள் கொடி பொறிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் அணிந்து விளையாடும்போது நான் பெருமிதத்தை உணர்கிறேன்" என்கிறார் ஜோசப்.
 
இப்போது யோசித்துப் பாருங்கள். பயிற்சி இல்லாத நாட்களிலும் கூட ஏன் இவர் கால்பந்து ஜெர்சியை அணிந்திருக்கிறார் என்று.