பாகிஸ்தானிய நடிகரை வைத்து படம் தயாரித்தால் ராணுவ நலனுக்கு நிதி தரவேண்டும்: ராஜ் தாக்கரே

பாகிஸ்தானிய நடிகரை வைத்து படம் தயாரித்தால் ராணுவ நலனுக்கு நிதி தரவேண்டும்: ராஜ் தாக்கரே


Murugan| Last Modified ஞாயிறு, 23 அக்டோபர் 2016 (09:43 IST)
பாகிஸ்தானிய நடிகரை வைத்து படம் தயாரிக்கும் ஒவ்வொரு இந்திய படத் தயாரிப்பாளரும், ராணுவ நல நிதிக்காக, சுமார் 745,000 அமெரிக்க டாலர்களை அளிக்க வேண்டும் என பிரபல இந்திய அரசியல்வாதி ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

 

 
பாஃவத் கான் என்ற பாகிஸ்தானிய நடிகர் நடித்துள்ள படம் வெளியானால் திரையரங்குகளை சேதப்படுத்தப் போவதாக அச்சுறுத்தியுள்ளவர்களில் ஒருவர் மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே.
 
இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீர் மற்றும் இந்திய ராணுவ தளத்தின் மீதான தாக்குதலுக்கு மத்தியில், சமீப மாதங்களாக, தெற்காசிய நாடுகளின் இடையேயான உறவு மோசமடைந்துள்ளது.
 
வெள்ளியன்று, இந்திய தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளுக்கு முழு தடையை பாகிஸ்தான் அமலுக்குக் கொண்டுவந்தது..

இதில் மேலும் படிக்கவும் :