1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 24 நவம்பர் 2023 (22:21 IST)

பாலத்தீனம்: ஹமாஸில் மாத சம்பளம் மட்டுமே ரூ.250 கோடி - நிதி அளிப்பது யார்?

Hamas
ஹமாஸ் அமைப்பில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளம் தருவதற்கு மட்டுமே ரூ.250 கோடி செலவாகிறது.
 
இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக் குழு இடையிலான மோதல் எப்போது முடிவுக்கு வரும் எனத் தெரியவில்லை. ஆனால், உலகின் சக்தி வாய்ந்த நாடான இஸ்ரேலை எதிர்க்கும் படைபலத்தை ஹமாஸ் எப்படி உருவாக்கியது?
 
ஹமாஸ் அமைப்பில் இருப்பவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளம் தருவதற்கு மட்டுமே ரூ.250 கோடி செலவாகிறது. ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வருகிறது? இதன் பின்னணியில் உள்ள நாடுகள் எவை?
 
காஸா மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இருபது ஆண்டுக் காலமாகக் கொண்டுள்ள அதிகாரத்தை உந்துவது எது?
 
இரண்டு ஆண்டுகளுக்க முன் இஸ்ரேலுடன் 11 நாட்கள் தொடர் தாக்குதலை நடத்தியது ஹமாஸ். அப்போதே, சுமார் 4000 ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவியது.
 
அதேபோல, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி அன்று நடந்த தாக்குதலில், ஒரே நாளில் சில ஆயிரம் ராக்கெட்டுகளை ஹமாஸ் பயன்படுத்தியது. இதன் மூலம், ஹமாஸ் ஆயுதக்குழுவினரிடம், ஏராளமான ராக்கெட்டுகள் இருப்பு உள்ளது என்பது தெளிவாகிறது.
 
காஸா பகுதியில் பணிபுரியும் சுமார் 50,000 ஊழியர்களுக்கு ஒரு மாதத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 250 கோடி ரூபாய்க்கு மேல் ஹமாஸ் செலவிடுகிறது. இந்த மாத ஊதியத்தைத் தவிர, குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள், போரில் காயமடைந்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு ஹமாஸ் நிதி உதவியும் வழங்கி வருகிறது.
 
அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் சென்ற பிபிசிக்கு கிடைத்த முக்கியத் தகவல்கள் - இஸ்ரேல் ராணுவம் என்ன செய்கிறது?
 
பல்வேறு நாடுகளில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் முதலீடு செய்து, அதன் மூலமும் பணம் சம்பாதிக்கின்றனர்.
 
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கைப்படி, காஸாவின் ஆண்டு பட்ஜெட் இந்திய ரூபாய் மதிப்பில் 5794.60 கோடி. காஸா பகுதியில் உள்ள அரசாங்கத்துடன், ஹமாஸ் ஆயுதக்குழுவும் பல வழிகளில் நிதியுதவி பெற்று வருகிறது.
 
ஹமாஸ் ஆயுதக்குழுவினர், மற்ற நாட்டின் அரசுகளிடமும், குடிமக்களிடமும் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்தும் நிதி உதவி பெற்று வருகின்றனர். நேரடியாக நிதிகளைப் பெறுவதைத் தாண்டி, கிரிப்டோ கரன்சி மூலமாகவும் இவர்கள் நிதி உதவி பெற்று வருகின்றனர்.
 
இதைத் தவிறர, பல்வேறு நாடுகளில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் முதலீடு செய்து, அதன் மூலமும் பணம் சம்பாதிக்கின்றனர்.
 
இரான், கத்தார், குவைத், துருக்கி, செளதி அரேபியா, அல்ஜீரியா, சூடான் மற்றும் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக ஆதரவளித்து வருகின்றன.
 
ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு பொருளாதார மற்றும் அரசியல் நிதி உதவி வழங்கும் நாடுகளில் கத்தார் முக்கியமான ஒன்று.
 
ஹமாஸ் ஒவ்வொரு மாதமும் கத்தாரிடமிருந்து இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 248 கோடி ரூபாய் பெறுவதாக சர்வதேச நாடுகளுக்கிடையேயான உறவுகள் குறித்து ஆராயும் ஐஆர்ஐஎஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் டிடிடா பெல்லோன் கூறினார்.
 
கத்தாரிடமிருந்து பெறப்படும் உதவித் தொகை காஸா பகுதியில் உள்ள ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் வழங்க பயன்படுத்தப்படுகிறது என்றார் அவர்.
 
இதனால், கடந்த கோடை காலத்தில் கத்தாரிடமிருந்து நிதி உதவி பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால், ஹமாஸ் ஆயுதக்குழுவினரால், தங்களது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
 
2018 ஆம் ஆண்டில், பிரேஞ்சு நாளிதழான ‘லிபரேஷன்’ காஸாவில் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியைத் தடுக்க கத்தார் 2014 ஆம் ஆண்டு முதல் நிதி உதவியளித்து வருவதாகக் கூறியது. கத்தார் மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் இந்த நிதி உதவி வழங்குவதால், இதில் எந்த ரகசியமும் இல்லை என அந்த செய்தி அறிக்கையில் கூறியிருந்தது.
 
ஷி ஜின்பிங்கை ‘சர்வாதிகாரி’ என்றழைத்த பைடன்
 
மேற்குக் கரையும் காஸா பகுதிக்கு நிதியுதவி செய்வதாக அறிவித்து, இன்று வரையும் நிதி உதவி வழங்கி வருகிறது.
 
ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஆதரவளிக்கும் நாடுகளில் கத்தார் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே 2012 முதல் கத்தார் தலைநகர் தோஹாவில் வசித்து வருகிறார். ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் அரசியல் அலுவலகமும் கத்தார் தலைநகரில் தான் அமைந்துள்ளது.
 
வாஷிங்டனில் உள்ள அரபு ஆய்வு மையத்தின் அறிக்கைப்படி, கத்தார் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு 2012 இல் இருந்து 2022 வரையில், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10,822 கோடி ரூபாய் வரை நிதி உதவி கொடுத்துள்ளது.
 
கடந்த இருபது ஆண்டுகளில், அல்ஜீரியா 908 மில்லியன் டாலரும், குவைத் 758 மில்லியன் டாலரும், செளதி அரேபியா 4 பில்லியன் 766 மில்லியன் டாலர்களையும் வழங்கியுள்ளது. மேற்குக் கரையும் காஸா பகுதிக்கு நிதியுதவி செய்வதாக அறிவித்து, இன்று வரையும் நிதி உதவி வழங்கி வருகிறது.
 
யூதர்களில் ஒரு பிரிவினர் ஏன் இஸ்ரேலுக்கு எதிராக இருக்கிறார்கள்?
 
பாலத்தீனம்: ஹமாஸில் மாத சம்பளம் மட்டுமே ரூ.250 கோடி - நிதி அளிப்பது யார்?பட மூலாதாரம்,GETTY IMAGES
ஹமாஸ் ஆயுதக்குழு, பாலத்தீனத்தில் இக்வான் அல்-முஸ்ஸில் அமைப்பின் கிளை அமைப்பாகத் தொடங்கியது.
 
இக்வான் அல்-முஸ்ஸில் ஒரு இஸ்லாமிய அமைப்பு. இது 1928 இல் எகிப்தில் தொடங்கப்பட்டது. எகிப்து, காஸா பகுதியுடன் நீண்ட காலமாக நெருங்கிய உறவு கொண்டிருந்தது.
 
ஆனால், 2013 இல், அப்துல் ஃபதா அல்-சிசி ஆட்சிக்கு வந்ததில் இருந்து, எகிப்தில் இருந்த பாலத்தீன குழுக்களுடனான உறவுகள் பலவீனமடையத் தொடங்கின.
 
காஸா பகுதிக்கு எகிப்தில் இருந்து தான் அதிக அளவில் உணவு மற்றும் முட்டைகள் கிடைக்கின்றன.
 
எகிப்தைப் போலவே துருக்கியும் ஹமாஸின் அரசியல் ஆதரவாளர். ஆனால் துருக்கி ஹமாஸுக்கு நிதி உதவி அளிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
 
எனினும் துருக்கி ஒவ்வொரு வருடமும் 300 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி உதவியாக வழங்கி வருவதாக இஸ்ரேலிய ஊடகமான 'ஹார்டெஸ்' தெரிவித்துள்ளது.
 
மேலும், துருக்கி 16 டன் வெடிபொருட்களை காஸாவுக்கு அனுப்பியதாகவும், அவற்றை தாங்கள் பறிமுதல் செய்துள்ளதாகவும் இஸ்ரேல் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
 
இந்தியாவுக்கு சாதகமாக ஆடுகளம் மாற்றப்பட்டது என்ற சர்ச்சை எழுந்தது ஏன்? வான்கடே மைதானத்தில் என்ன நடந்தது?
 
ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ராணும் மற்றும் நிதி உதவி வழங்குவதில், இரான் முக்கியப் பங்கு வகிக்கிறது.
 
“ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். இரான் ஹமாஸுக்கு அனைத்து விதமான ஆதரவையும் அளித்து வருகிறது. ஹமாஸ் ராணுவப் பிரிவுக்கு நிதியுதவி செய்கிறது. ராணுவத்தினரால் அவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது,” என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுல்லிவன் சமீபத்தில் கூறியிருந்தார்.
 
இதற்கிடையில், ஐரோப்பிய ஆணையம் சமீபத்தில் ஹமாஸின் ஆயுதங்களில் 93 சதவீதம் இரானில் இருந்து வருகிறது என்று கூறியது.
 
2020 ஆம் ஆண்டின் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கையின்படி, இரான் ஹமாஸுக்கு ஆண்டுதோறும் 100 மில்லியன் டாலர் நிதியுதவி அளித்து வருகிறது.
 
பல்வேறு நாடுகளில் உள்ள சாதாரண குடிமக்கள், குழுக்கள் மற்றும் தொண்டு அமைப்புகளின் நன்கொடைகளும் ஹமாஸுக்கு முக்கிய நிதி ஆதாரமாக உள்ளன.
 
பாரசீக வளைகுடா நாடுகள், பாலத்தீனர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் பாலத்தீன தொண்டு நிறுவனங்களிடமிருந்தும் ஹமாஸ் நிதி உதவி பெறுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
 
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன், 'அல் அன்சார்' போன்ற குழுக்களும் ஹமாஸுக்கு ஆதரவாக இருக்கின்றன.
 
அல் அன்சார் இஸ்லாமிய ஜிஹாத்துடன் தொடர்புடையது. அல் அன்சார் 2001 இல் பாலத்தீன பிராந்தியங்களில் உதவி வழங்குவதற்காக நிறுவப்பட்டது. இது குறிப்பாக காஸா மற்றும் மேற்குக் கரையில் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டது.
 
வள்ளிக்கும்மி நிகழ்ச்சியில் சாதிய உறுதிமொழியால் சர்ச்சை
 
ஹமாஸின் நிதி நடவடிக்கைகளில் கிரிப்டோ கரன்சி ஒரு முக்கிய பகுதியாக உள்ளது.
 
கடந்த ஏழு ஆண்டுகளில் கிரிப்டோ-கரன்சியில் முதலீடு செய்து ஹமாஸ் 41 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சமீபத்தில் வெளியிட்டது.
 
ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு கிரிப்டோ கரன்சி மூலம் மில்லியன் கணக்கான டாலர்களை நிதியுதவியாக பெறுவதாகவும் அந்த அறிக்கை கூறியது. இந்த தகவலை அறிந்த அமெரிக்க அரசு, ஹமாஸின் நடவடிக்கைகளை தடுக்க கடுமையான சட்டங்களை இயற்ற முடிவு செய்தது.
 
இரானும் ஹமாஸுக்கு கிரிப்டோ கரன்சி மூலம் உதவிகளை வழங்கி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
 
இரானிடம் இருந்து ஹமாஸ் பெறும் பணம் பல்வேறு நாடுகளில் முதலீடு செய்யப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
 
சூடான், அல்ஜீரியா, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிற நாடுகளில் மில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
 
ஹமாஸ் ஆயுதக்குழுவின் போர்ட்ஃபோலியோ நிறுவனங்கள் சட்டபூர்வமான வணிகங்களாகத் தோன்றுகின்றன. அதன் பிரதிநிதிகள் தங்கள் சொத்துக்களை ஹமாஸ் கட்டுப்படுத்துகிறது என்ற உண்மையை மறைக்க முயல்கின்றனர்.
 
அமெரிக்க வெளியுறவுத்துறையின் கூற்றுப்படி, முதலீட்டு தகவல்களை ஹமாஸ் ஆயுதக்குழுவின் உயர்மட்ட தலைவர்கள் கண்காணிக்கிறார்கள்.