திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 26 ஜூலை 2018 (11:41 IST)

பாகிஸ்தான் தேர்தல் - இம்ரான் கானின் கட்சி எட்டு தொகுதிகளில் வெற்றி

பாகிஸ்தான் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் முன்னிலை வகிக்கிறார்.
ஆனால், வாக்கு எண்ணிக்கையில் பெரியளவில் மோசடி நடப்பதாக அரசியல் போட்டியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
 
11:15 AM: இதுவரை அதிகாரபூர்வமற்ற முடிவுகள் தெரியவந்துள்ள 12 தொகுகளில் 8இல் வெற்றிபெற்று இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப்  கட்சி தொடர்ந்து முன்னிலை வகிப்பதாகவும், மீதமுள்ள இரண்டு தொகுதிகளில் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், ஒரு தொகுதியில் முத்தஹீதா மஜ்லிஸ் இ-அமல்  கூட்டணியும் வெற்றிபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
10:55 AM: பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரான ஹம்சா ஷபாஸ் ஷெரிஃப், தான் போட்டியிட்ட தேசிய தொகுதி எண் 124இல்  வெற்றிபெற்றுள்ளார் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
10:35 AM: பழங்குடி மக்கள் அதிகளவில் உள்ள தேசிய தொகுதி எண் 40இல் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் குல் தாத் கான் தன்னை எதிர்த்து  போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளரைவிட 16,766 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
 
10:15 AM: பெஷாவரிலுள்ள தேசிய தொகுதி எண் 28 மற்றும் 30 ஆகிய தொகுதிகளில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் வேட்பாளர்கள்  முறையே அர்பாப்-இ-அமீர் அயூப் மற்றும் ஷிர் அலி அர்பாப் ஆகியோர் வெற்றிபெறுள்ளனர்.
 
9:50 AM: இதுவரை முடிவு அறிவிக்கப்பட்டுள்ள ஏழு தொகுதிகளில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் நான்கு தொகுதிகளிலும்,  பாகிஸ்தான் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் ஒரு சுயேட்சை ஆகியோர் தலா ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்றுள்ளனர்.
 
9.20AM: பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் வேட்பாளர் ஜின்னா அக்பர் மலாக்னட் தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார். அவர் 81,310 வாக்குகள்  பெற்றுள்ளார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரான குல் நசீம் கான் 31,312 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
 
8:49 AM: லாகூரில் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சி வெற்றி
 
லாகூரில் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின் வேட்பாளர் மாலிக் கராமத் அலி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரான செய்ஃப் அல்-முல்க் கொகரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். மாலிக் பெற்ற மொத்த வாக்குகள் 64,765.