1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (10:32 IST)

வடகொரியா ஏவுகணை சோதனை

வடகொரியா ஏவுகணை சோதனை
குறைந்த தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை ஒன்றை அதன் கிழக்கு கடலோரப் பகுதியில் வட கொரியா செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏவியுள்ளது என்று தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான மற்றும் ஆயுதங்களை சோதனை செய்வதற்கான வடகொரியாவின் உரிமையை யாராலும் தடுக்க முடியாது என்று வடகொரியாவின் தூதர் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் தெரிவித்துள்ள சூழ்நிலையில் இந்த ஆயுத சோதனை நடந்துள்ளது.
 
இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை மாற்று க்ரூஸ் ஏவுகணை ஆகியவற்றை வட கொரிய அரசு சோதனை செய்திருந்தது.
 
சில நாட்களுக்கு முன்பு தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தாங்கள் விரும்புவதாகவும் வடகொரியா அரசு தரப்பில் சென்ற வாரம் கூறப்பட்டிருந்தது.
 
இந்த ஏவுகணை சோதனை நடந்துள்ளது தங்களுக்குத் தெரியும் என்று கூறியுள்ள அமெரிக்க ராணுவம், அமெரிக்கப் படையினருக்கோ அதன் கூட்டாளி நாடுகளைச் சேர்ந்த சேர்ந்தவர்களுக்கோ வடகொரியாவின் ஏவுகணை சோதனையால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளது.