1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 8 ஜூன் 2020 (12:18 IST)

"அரசியமைப்பு சட்டத்திலிருந்து திசைமாறிச் செல்கிறார் டிரம்ப்” - குடியரசு கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பு

அமெரிக்காவில் நடந்துவரும் இனவெறிக்கு எதிரான போராட்டத்தை அதிபர் டிரம்ப் கையாளும் விதத்தை கடுமையான விமர்சித்துள்ள முன்னாள் உள்துறை செயலாளர் காலின் பாவெல் அரசியலமைப்பு சட்டத்திலிருந்து திசைமாறி டிரம்ப் செல்வதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்க ராணுவத்தில் முன்னணி பொறுப்பிலிருந்து பின்னர் குடியரசு கட்சியில் இணைந்து அரசியல்வாதியாக மாறிய காலின் பாவெல், போராட்டத்தை ஒடுக்க  ராணுவத்தை அழைப்பேன் என டிரம்ப் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
''நம்மிடம் அரசியலமைப்பு சட்டம் உள்ளது. அதை நாம் பின்பற்ற வேண்டும். ஆனால்,அதிபர் டிரம்ப் அதில் இருந்து திசை மாறிச்செல்கிறார்'' என பாவெல்  கூறியுள்ளார்.
 
அமெரிக்க அதிபர் டிரம்பும், காலின் பாவெலும் குடியரசு கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், நவம்பர் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பிடனுக்கு தான் வாக்களிக்கப்போவதாகக் காலின் பாவெல் தெரிவித்துள்ளார்.
 
காலின் பாவெல் ஒரு மிகைப்படுத்தப்பட்ட நபர் என அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
 
ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவர் அமெரிக்காவில் போலீஸ் காவலில் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுக்க போராட்டங்கள் வெடித்தது.  இந்தநிலையில் போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை அழைப்பேன் என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.