வியாழன், 1 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2016 (19:34 IST)

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் 6 பேர் கைது

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் 6 பேர் கைது
நேற்று மாலை கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் மேற்கொண்ட தேடுதலொன்றின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


 

 
கைது செய்யப்படும்போது இவர்கள் வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள மாடி வீடொன்றில் தங்கியிருந்தனர்.
 
இவர்களின் விசா அனுமதி பத்திரங்கள் காலாவதியாகி இருந்ததாக கூறிய காவல்துறையினர் இவர்கள் சம்பந்தமாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.
 
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குடிவரவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் காவல்துறையினர் அறிவித்தனர்.
 
கடந்த சில தினங்களாக சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த இந்தியர்கள் பலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.