திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: திங்கள், 16 மார்ச் 2020 (11:58 IST)

ஐஸ்லாந்து, அண்டார்டிகா: அபாயத்தில் 40 கோடி மக்கள் - உலகத்தை தாக்க இருக்கும் இன்னொரு பேரபாயம்

அபாயத்தில் 40 கோடி மக்கள் - உலகத்தை தாக்க இருக்கும் மற்றொரு பேரபாயம்.

ஐஸ்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டிகள் 1990களில் உருகியதைவிட ஆறு மடங்கு அதிகமாக உருகுவதாக புதிய ஆய்வொன்று சுட்டிக்காட்டுகிறது.  புவி வெப்பமயமாதலால் 1992 - 2017 இடையிலான காலகட்டத்தில் மட்டும் 6.4 டிரில்லியன் டன் பனிக்கட்டிகள் உருகி உள்ளன.
 
இதன் காரணமாக 17.8 மி.மீ அளவுக்குக் கடல்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலை தொடருமானால் 2100ஆம் ஆண்டுக்குள் 40 கோடி மக்களின் எதிர்காலம்  கேள்விகுறியாகும் என இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. ஐஸ் ஷீட் மாஸ் பேலன்ஸ் இன்டர்கம்பரிசன் திட்டம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா: மலேசியாவில் ஒரே நாளில் 190 புது நோயாளிகள்
 
மலேசியாவில் இன்று ஒரே நாளில் 190 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா கிருமியால்  பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 428-ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும்  கிருமித் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும் சந்தேக நபர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவதும்  கண்காணிப்பதும் தீவிரமடைந்துள்ளது.