வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2019 (11:33 IST)

கிரீன்லாந்து பனி விரிப்பின் கீழ் பதுங்கியுள்ள 50 ஏரிகள்!

கிரீன்லாந்தில் படர்ந்துள்ள பனி விரிப்பின் கீழ் 50-க்கும் மேற்பட்ட ஏரிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 
 
கிரீன்லாந்தில் படர்ந்துள்ள பனி விரிப்பின் கீழ் இதற்கு முன்னதாக நான்கு ஏரிகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 50-க்கும் மேற்பட்ட ஏரிகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 
 
அண்டார்டிகாவில் உள்ள பனி விரிப்பின் கீழ் சுமார் 470 ஏரிகள் இருக்கின்றன. ஆனால், தற்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நடத்திய இந்த ஆய்வில் வட துருவப்பகுதியிலும் இவ்வாறான ஏரிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
 
நிலப்பரப்பிற்கு மேலிருந்து வரும் அழுத்தமும், அடியில் இருந்து வரும் ஜியோதெர்மல் வெப்பமும் அந்த ஏரிகளை திரவ நிலையில் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.