1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 17 மே 2022 (10:37 IST)

மேரியோபோல் ஆலையில் சிக்கிய யுக்ரேன் படையினர் வெளியேற்றம்

Ukrainian forces
யுக்ரேனின் மேரியோபோலில் உள்ள அஸவ்ஸ்டால் ஆலையில் இரு மாதங்களுக்கு மேல் சிக்கியிருந்த யுக்ரேன் படையினர் அங்கிருந்து மனிதநேய வழித்தடம் மூலமாக வெளியேற்றப்பட்டதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது.


படுகாயமடைந்த 53 வீரர்கள் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்த நோவாசோவ்ஸ்க் நகருக்குக் அழைத்துச் செல்லப்பட்டதாக யுக்ரேன் பாதுகாப்பு துறை துணை அமைச்சர் ஹன்னா மாலியார் தெரிவித்தார்.

மேலும், 211 வீரர்கள், கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்த ஒலெனிவ்கா நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக, அவர் தெரிவித்தார்.

அஸவ்ஸ்டால் ஆலையில் காயமடைந்த வீரர்களை வெளியேற்ற இருநாட்டுக்கும் இடையில் ஒப்பந்தம் உருவாகியிருப்பதாக, ரஷ்யா முன்னதாக தெரிவித்திருந்தது.

டஜன் கணக்கிலான பேருந்துகள் மூலம் யுக்ரேன் படையினர் அந்த ஆலையிலிருந்து திங்கள்கிழமை மாலை வெளியேற்றப்பட்டதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

அதேபோல, யுக்ரேன் படையினர் அங்கிருந்து வெளியேற்றப்படும் வீடியோக்களை ரஷ்ய அரசு ஊடகமும் வெளியிட்டுள்ளது.