மின்சார பெண் நேஹா: 20 வயதில் எலக்ட்ரீஷியனாக அசத்துகிறார்மின்சார பெண் நேஹா: 20 வயதில் எலக்ட்ரீஷியனாக அசத்துகிறார்
எலக்ட்ரிஷியன் வேலை என்றவுடன் நம் மனதில் தோன்றும் உருவம் நிச்சயம் ஒரு ஆணாக இருக்கும். ஆனால் நேஹா அந்த எண்ணத்தை மாற்ற முயற்சி செய்து வருகிறார்.
20 வயதான நேஹா, கடந்த 2 ஆண்டுகளாக எலக்ட்ரிஷியனாக பணியாற்றி வருகிறார். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய இவர், சொந்தமாக ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இந்தத் தொழிலை தேர்வு செய்தார்.
மின்சார உபகரணங்களை கையாளும்போது மின்சாரத்தை கண்டு பயம் ஏற்படுமா என்று நேஹாவிடம் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
ஹரியானாவைச் சேர்ந்த நேஹா, வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது தந்தை கூலி வேலை செய்து வருகிறார். தாயார் உஷா இல்லத்தரசி. நேஹாவுக்கு எல்லா நாட்களிலும் வேலை கிடைப்பதில்லை.
எலக்ட்ரிஷியன் வேலையை கற்றுக் கொள்ள நேஹா அதிக ஆர்வம் காட்டியதாகவும், இப்போது ஆண்களை விட சிறப்பாக பணிகளை செய்வதாகவும் நேஹாவுக்கு பயிற்சியளித்த அஸ்வினி தெரிவித்தார்.