திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (13:31 IST)

உயிருக்கு போராடும் நடிகை குஷ்பூ - என்ன ஆச்சு? ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து ரசிகர்களின் பேஃவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. 
 
இவர் கடந்த 2001ம் ஆண்டு சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். திருமண வாழ்க்கைக்கு பிறகும் வெள்ளித்திரைகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக்கொண்டே தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அரசியலிலும் குதித்தார். 
 
இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் படுக்கையில் தீவிர சிகிச்சை எடுத்து வரும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு குஷ்பு ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளார். மேலும் அந்த அப்பதிவில், தனக்கு Adeno virus தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். 
 
மேலும், அதிகமான ஜுரம் மற்றும் உடல்வலி கூடிய பலவீனம் போன்றவை அதிகம் ஆனதால் தீவிர சிகிச்சை பிரிவில் அட்மிட் செய்யப்பட்டுள்ளேன். நீங்களும் Flu காய்ச்சலின் அறிகுறியை சாதாரணமாக நினைக்காதீர்கள். உங்களின் உடலில் ஏற்படும் அறிகுறி தெரியும் போது பொறுமையாக இல்லாமல் உசாராகிவிடுங்கள். உடல் மீது அக்கரைக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.