திங்கள், 15 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2017 (19:43 IST)

டோனி: ஆட்ட நாயகனா? நடன நாயகனா?

டோனி: ஆட்ட நாயகனா? நடன நாயகனா?
வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தனத ரசிகர்களை உற்சாகப்படுத்துவதில், முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் டோனி வல்லவர்.


 

 
கிரிக்கெட் மைதானத்தில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் விளாசுவது அல்லது களத்தில் வேடிக்கையாக ஏதாவது செய்து ரசிகர்களை டோனி மகிழ்ச்சியடைச் செய்வார்.
 
ஆனால், வேடிக்கையாக அவர் நடனமாடும் காணொளி ஒன்றை தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
 
நான்கே பந்துகளில் 92 ரன்களை அள்ளிக்கொடுத்த `வள்ளல்"
 
இந்த காணொளி குறித்து அதிகமாகப் பேசப்படுவதற்கு முக்கிய காரணம், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் டோனி விளையாடும் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி இந்த காணொளி பகிரப்படுவதற்கு முன்னர் தான் தோல்வியுற்றது.

டோனி: ஆட்ட நாயகனா? நடன நாயகனா?

 

 
2017 ஐபிஎல் தொடரில் நடந்த இந்த போட்டியில், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றது. ஆனால், இந்த தோல்வி டோனியின் மகிழ்ச்சியை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
 
இந்த காணொளியில் அவர் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியின் பிரத்யேக ஆடையை அணிந்திருந்தார். அவருக்கு அருகில் நின்ற சக அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் டோனியின் நடனத்தை ரசித்தவாறு தாளமிட முயற்சித்தார்.

டோனி: ஆட்ட நாயகனா? நடன நாயகனா?

 

 
டோனியின் நடனத்துக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அவரது இன்ஸ்டாகிராம் பதிவை 8 லட்சம் பேருக்கும் மேல் பார்த்துள்ளனர். நான்காயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இது தொடர்பாக கருத்து பதிவு செய்துள்ளனர்.
 
டோனியின் நடனம் அற்புதமாக இருந்ததாகவும், அவரை இவ்வாறு மகிழ்ச்சியாக பார்ப்பதை தங்கள் விரும்புவதாகவும் பலரும் பதிவு செய்துள்ளனர்.