1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 16 ஜூன் 2016 (17:22 IST)

தெருவோர குழந்தைகளிடம் பாகுபாடு: தில்லி உணவகம் மீது குற்றச்சாட்டு

தில்லியில், தெருவோர குழந்தைகளுக்கு உணவகம் ஒன்று உணவு பரிமாற மறுத்த விவகாரத்தில், குழந்தைகள் மீது பாகுபாடு காட்டியதாக உணவகம் மீது அதிகாரிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
 

 
தில்லியில் நன்கு அறியப்பட்ட வணிக மற்றும் சுற்றுலா பகுதியுமான கன்னாட் பிளேசில் உள்ள உணவகம் ஒன்றில், குழந்தைகளுக்கான மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தில்லி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை ஒன்றிற்கும் உத்தரவிட்டுள்ளனர்.
 
தன் கணவருடைய பிறந்தநாளை கொண்டாடிய சோனாலி ஷெட்டி என்ற எழுத்தாளர், கன்னாட் பிளேசில் உள்ள அந்த உணவகத்துக்கு தெருவோரக் குழந்தைகளை அழைத்து சென்றுள்ளார். ஆனால், அந்த குழந்தைகளுக்கு உணவு பரிமாற உணவகம் மறுத்துவிட்டது.
 
குழந்தைகளுக்கு இலவச உணவு வேண்டி சோனாலி ஷெட்டி கோரியதாக உணவகம் விளக்கம் அளித்துள்ளது. அதனை சோனாலி ஷெட்டி மறுத்துள்ளார்.