1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (23:57 IST)

கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவின் தடுப்பு மருந்து தேவை பூர்த்தியாகுமா?

கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டிருக்கு சீரம் இன்ஸ்ட்யூட்டின் தலைவர், தடுப்பு மருந்தின் தயாரிப்பு "மிகுந்த நெருக்கடியானது," என தெரிவித்துள்ளார்.
 
நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கான தடுப்பு மருந்துகளையும் சீரம் நிறுவனம் வழங்கி வந்தது. ஆனால் இந்தியா தற்போது இந்த ஏற்றுமதிகளுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.
 
உள்நாட்டு தேவையை இந்தியாவால் பூர்த்தி செய்ய முடியுமா?
தனது மக்கள் அனைவருக்கு தடுப்பு பூசி வழங்குவதில் பெரும் சவாலை சந்திக்கிறது இந்தியா.
 
"நாங்கள் இந்தியாவின் தேவையை முன்னிலைப்படுத்தியுள்ளோம்" என இந்திய தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் சீரம் இன்ஸ்ட்டியூட் தலைவர் அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார். இருப்பினும் "இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்வதே தட்டுப்பாடாக உள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.
 
ஏப்ரல் 7ஆம் தேதி வரை சுமார் 85 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்து தேசிய அளவில் வழங்கப்பட்டுள்ளது. இது சமீபமாக 45 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் தடுப்பு மருந்து செலுத்திக் கொள்ளலாம் என விரிவாக்கப்பட்டது. இதைத் தாண்டி "குறைவான இருப்பால்" ஜூலை வரை தடுப்பு மருந்து திட்டம் விரிவாக்கப்படாது என அரசு தெரிவித்துள்ளது.
 
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அம்மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர், தடுப்பு மருந்துகள் இருப்பு மிக குறைவாக இருப்பதாக கவலை தெரிவித்துள்ளார்.
 
இதேபோன்ற பற்றாக்குறை வேறு சில பகுதிகளிலும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
 
பெங்களூருவில் உள்ள தடுப்பு மருந்து சேமிப்பகம்
 
இதுவரை, சீரம் இன்ஸ்ட்டிட்யூட் இந்திய அரசுக்கு 166 மில்லியன் டோஸ்கள் மருந்துகளை விநியோகம் செய்வதாக ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. மற்றொரு நிறுவனமான பாரத் பயோடெக், 10 மில்லியன் டோஸ்களை விநியோகிக்கும்.
 
200மில்லியன் டோஸ் ஸ்புட்னிக் தடுப்பு மருந்தை தயாரிக்க ரஷ்யாவின் கமாலேயா ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டுடன் இந்தியா அனுமதி ஒப்பந்தம் போட்டுள்ளது. இது இந்திய தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப்படும். இந்திய சந்தை மற்றும் ஏற்றுமதிகளுக்கும் தயாரிக்கப்படும்.
 
ஏன் இந்த `நெருக்கடி`?
இரண்டு கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பாளார்கள், இந்தியாவின் தேவைக்கு தடுப்பு மருந்து தயாரிப்பதில் நெருக்கடி இருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர்.
 
அதில் அதிகபட்சமாக நோவாவாக்ஸ் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிட்யூட். மூலப்பொருள் தட்டுப்பாட்டால் தங்களின் தயாரிப்பு தடைபடும் என தெரிவித்துள்ளது.
 
அதன் தலைமை நிர்வாகி பூனாவாலா, தடுப்பு மருந்து தயாரிப்புக்கு தேவையான சில பொருட்களின் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளதை குறிப்பிட்டார். சில குறிப்பிட்ட ரசாயனங்கள் உட்பட சில மூலப்பொருட்களின் இறக்குமதி கடினமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
 
"இந்த மூலப் பொருட்களை பகிர்வது, நெருக்கடியான ஒரு விஷயமாக உள்ளது. இதற்கு இதுவரை யாராலும் தீர்வு காண முடியவில்லை," என்கிறார் பூனாவாலா.
 
பிரேசிலை அச்சுறுத்தும் P.1 கொரோனா - என்ன நடக்கிறது?
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: கட்டுப்பாடுகள் என்னென்ன?
காட்டுக்குள் அறிவியல்: கொரோனாவை வென்ற ஓர் அமேசான் பழங்குடியின் கதை
சர்வதேச அளவில் தடுப்பு மருந்துகள் எந்த தடையும் இன்றி, தயாரிக்கப்படவும், விநியோகிக்கப்படவும் இந்தியா தலையிட்டு உறுதிப்படுத்த வேண்டும் என சீரம் இன்ஸ்டியூட் இந்திய அரசாங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
 
ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பு மருந்தை தயாரிக்கும் மற்றொரு தயாரிப்பு நிறுவனம் பயோலோஜிக்கல் இ, தடுப்பு மருந்து தயாரிப்பு தடைப்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளது.
 
நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி மஹிமா தட்லா, குறிப்பிட்ட நேரத்தில் "டெலிவரி செய்வதற்கான உறுதியை அளிப்பதில் அமெரிக்க தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்" என தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்கா ஏன் தடை விதிக்கிறது?
தடுப்பு மருந்து தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருகள் தட்டுப்பாடுகள் குறித்து ஆராய தனது நிர்வாகத்திற்கு பைடன் உத்தரவிட்டுள்ளார்.
 
1950ஆம் ஆண்டு கொண்டு வந்த பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை அமல்படுத்தியுள்ளார். இந்த சட்டம் அவசரகாலத்தில் அதிபருக்கு உள்நாட்டு பொருளாதாரத்துக்கு அணித்திரட்டும் அதிகாரத்தை கொடுக்கிறது.
 
உள்நாட்டு உற்பத்திக்கு தேவையான பொருட்களை ஏற்றுமதி செய்வதை இந்த சட்டம் கட்டுப்படுத்துகிறது.
 
பிப்ரவரி மாதம் இந்த சட்டத்தை பயன்படுத்தி சிறப்பு குழாய்கள், வடிகால் அமைப்புகள் என அமெரிக்க தடுப்பு மருந்து தயாரிப்பாளர்களுக்கு முதன்மையாக தேவையான பொருட்கள் கிடைக்கும்படி செய்ய இருப்பதாக பைடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
முக்கிய விநியோக நபர்கள் விதிக்கும் ஏற்றுமதி தடையால், சர்வதேச அளவில் தடுப்பு மருந்து தயாரிப்பு பாதிக்கப்படுவதாக சர்வதேச தடுப்பு மருந்து தயாரிப்பாளர்கள் பலர் கவலைகளை எழுப்பினர்.
 
"தேவை அதிகமாக இருந்தாலும், புதிய விநியோகஸ்தர்கள் பிற துறைகளை போல இந்த துறையில் வேகமாக பொருட்களை தயாரிக்க முடியாது. அல்லது புதிய தயாரிப்பாளர்கள் நம்பமாட்டார்கள்." என லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தில் தடுப்பு மருந்து விநியோக சங்கிலி நிபுணர் தெரிவிக்கிறார்.
 
தற்போதைய அமெரிக்க நடவடிக்கை சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறை காரணமாக இருக்கலாம் என்றும் சாரா தெரிவிக்கிறார்.
 
"ஒரு கட்டத்திற்கு மேல் உலகளவில் தேவை அதிகரித்துள்ள ஒரு பொருளுக்கான மூலப்பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்க முடியாது," என தெரிவிக்கிறார் சாரா.
 
கொரோனா தயாரிப்பில் தாக்கம்
 
இந்தியாவில் தற்போது இரு தடுப்பு மருந்துகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்ஃபோர்ட் - ஆஸ்ட்ராசெனிகா தடுப்பு மருந்தான கோவிஷீல்ட், மற்றும் கோவாக்ஸின் இந்திய ஆய்வகங்களில் உருவாக்கப்படுகிறது.
 
ஜனவரி மாதத்திலிருந்து சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவால் தயாரிக்கப்பட்ட சுமார் 150 மில்லியன் டோஸ் கோவிஷீல்ட், ஏற்றுமதிக்காகவோ அல்லது உள்நாட்டிலோ பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்திய மருத்துவ நிறுவனங்கள் புதிய வசதிகளை கொண்டு தடுப்பு மருந்து தயாரிப்பை அதிகரித்துள்ளது. உள்நாட்டு தேவைகளையும், சர்வதேச தேவைகளையும் நிறைவேற்ற இந்த நடவடிக்கைகளை நிறுவனங்கள் எடுத்துள்ளன.
 
ஜனவரி மாதத்தில் 60-70மில்லியன் டோஸ்கள் வரை தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் என அப்போது சீரம் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதில் கோவிஷீல்ட் மற்றும் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட நோவாவாக்ஸும் அடங்கும்.
 
அப்போது மார்ச் மாதத்திலிருந்து 100 மில்லியன் டோஸ்கள் வரை தயாரிக்க இலக்கு வைத்துள்ளதாக சீரம் இன்ஸ்டியூட் பிபிசியிடம் தெரிவித்திருந்தது. ஆனால் சமீபமாக இதை ஆராய்ந்தால், 60-70 மில்லியன் டோஸ்கள் தான் தற்போது வரை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
ஜூன் மாதத்தில்தான் 100 மில்லியன் டோஸ்கள் வரை தயாரிக்கப்படும் என பூனாவாலா தெரிவித்துள்ளார்.
 
கோவேக்ஸ் திட்டத்தில் விநியோக தாக்கம்

கடந்த செப்டம்பர் மாதம், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கும் தடுப்பு மருந்து கிடைக்க வகை செய்யும் உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பு மருந்து பகிர்தல் திட்டமான கோவக்ஸ் திட்டத்திற்கு 200 மில்லியன் டோஸ்களை கொடுப்பதாக சீரம் ஒப்புக் கொண்டது. இந்தியா இதுவரை 28 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்துகளை கோவேக்ஸ் திட்டத்திற்கு வழங்கியுள்ளது என ஐ.நா தெரிவித்துள்ளது.
 
இருப்பினும் தற்போது ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்றால் மார்ச்சில் எதிர்பார்க்கப்பட்ட 40 மில்லியன் டோஸ்கள் கிடைக்கப்பெறாது என்று அர்த்தம். இது ஏப்ரல் மாதம் இன்னும் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
கோவேக்ஸ் திட்டத்தின் மூலம் இந்தியா இதுவரை 10 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்தை பெற்றுள்ளது. இதுவரை அதிகளவில் தடுப்பு மருந்து பெற்ற நாடாக இந்தியா உள்ளது.
 
ஐநா தரவுகள்படி 900மில்லியன் டோஸ் ஆஸ்ட்ராசெனிகா மற்றும் 145மில்லியன் டோஸ் நோவாவாக்ஸ் தடுப்பு மருந்தை தயாரிக்க இருதரப்பு ஒப்பந்தத்தில் சீரம் கையெழுத்திட்டுள்ளது.
 
இந்தியா பல்வேறு நாடுகளுக்கு தடுப்பு மருந்தை தானமாக வழங்கியுள்ளது. குறிப்பாக தெற்காசியாவில் உள்ள தனது அண்டை நாடுகளுக்கு.
 
ஏற்றுமதி நிறுத்தப்படும் வரை இந்தியா உலகளவில் அதிக தடுப்பு மருந்துகளை தானமாக வழங்கியுள்ளது. தற்போது சீனா அந்த இடத்தில் உள்ளது.