ஆந்திர கொரோனா வைரஸ் திரிபு 1,000 மடங்கு வேகமாக பரவுமா? உண்மை என்ன?

Andhra - corona virus
Sasikala| Last Updated: திங்கள், 10 மே 2021 (10:25 IST)
ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் கொரோனா வைரஸ் திரிபு ஆயிரம் மடங்கு அதி வேகமாகப் பரவுகிறதா?

இந்த கொரோனா வைரஸ் திரிபால்தான் மற்ற இந்திய மாநிலங்கள் ஆந்திரப் பிரதேச மக்களை கண்டால் அச்சப்படுகிறார்கள். 'ஆந்திரப் பிரதேச கொரோனா திரிபு'  இந்த சொல் தற்போது எல்லோரையும் பயத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
 
இந்த ஆந்திரப் பிரதேச கொரோனா வைரஸ் திரிபு கர்னூல் மாவட்டத்தில் உருவானதாகவும் விசாகப்பட்டினம் முழுக்க ஆயிரம் மடங்கு அதிவேகமாக பரவி  வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை கிளப்பியிருக்கிறது.
 
ஆந்திரப் பிரதேச கொரோனா திரிபு, ஓர் அரசியல் புயலை கிளப்பி இருக்கிறது. டெல்லி யூனியன் பிரதேச அரசு ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களிலிருந்து  வரும் மக்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.
 
உண்மையிலேயே ஆந்திரப் பிரதேச கொரோனா வைரஸ் திரிவு அத்தனை வலுவானதா? இந்த திரிபு குறித்து நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்?
 
கொரோனா வைரஸ் திரிபு என்றால் என்ன?
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கும் ஒருவரின் உடலில் வைரஸ் வளரும். அப்படி மனித உடலில் வளரும் வைரஸ் தன்னுடைய செல்களின்  எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளும். இதை ஆங்கிலத்தில் ரிப்ளிகேஷன் என்கிறார்கள்.
 
இப்படி மனித உடலில் வளரும் போது, ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு பரவுகிறது. அப்படி வைரஸ் பரவும் போது அது தனக்குள்ளேயே சில மாற்றங்களை  செய்து கொள்கிறது. அதைத்தான் மரபணு பிறழ்வு (Mutation) என்கிறோம்.
 
இப்படி 2 முதல் 3 மாத காலத்துககுள் பல்வேறு மரபணு பிறழ்வுகள் ஒன்றிணையும் போது, அதிலிருந்து ஒரு புதிய கொரோன வரஸ் திரிபு (Variant)  உருவாகிறது.
 
பொதுவாக ஒரு வைரஸ் மரபணு பிறழ்வுக்கு உட்படும் போது, வைரஸ் ஏற்படுத்தும் நோயின் அறிகுறி, நோய் பரவும் வேகம், அந்த நோயினால் மனித உடலில்  ஏற்படும் தாக்கங்கள் அனைத்தும் மாறுபடும்.
 
அதே போல கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவ தொடங்கியபின் இதுவரை பல்லாயிரக்கணக்கான மரபணு பிறழ்வுகளை கண்டிருக்கிறது. அதில் சில  மரபணு பிறழ்வுகள் புதிய திரிபுகளாக உருவாகி இருக்கின்றன.
 
அப்படி புதிய திரிபுகளாக உருவாகி இருக்கும் அனைத்து கொரோனா வைரஸ் திரிபுகளும் பெரிய பிரச்னைகளை ஏற்படுத்துவதில்லை. வெகு சில கொரோனா  வைரஸ் திரிபுகள் மட்டுமே அதிவேகத்தில் பரவுகின்றன.
 
"உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகம் முழுக்க பல நூறு கொரோனா வைரஸ் திரிபுகள் இருக்கின்ற போதும், நாம் மூன்று கொரோன வைரஸ் திரிபுகளை  கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறது. அவை தென்னாப்பிரிக்க திரிபு, பிரேசில் திரிவு, பிரிட்டன் திரிபு ஆகியவை. அம்மூன்று கொரோனா வைரஸ்  திரிபுகள் போக இன்னும் ஏழு கொரோனா வைரஸ் திரிபுகளை நாம் கவனிக்க வேண்டும்" என்கிறார் நிஜாமாபாத் அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவர் மாடாலா  கிரண்.
 
பிரிட்டன் வேரியன்ட் என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் திரிபு 23 மரபணு பிறழ்வுகளை கொண்டிருக்கிறது. அதேபோல மகாராஷ்டிர திரிபு 15 மரபணு  பிறழ்வுகளை கொண்டிருக்கிறது.
 
தற்போது இந்தியாவில் என்னென்ன கொரோனா வைரஸ் திரிபுகள் இருக்கின்றன?
 
இந்தியாவில் தற்போது பல கொரோனா வைரஸ் திரிபுகள் பரவிக் கொண்டிருக்கின்றன. அதில் சில திரிபுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின்  எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன. சில திரிபுகள் மிகக் குறைந்த அளவிலான நபர்களையே பாதிக்கின்றன.
 
"டபுள் மியூட்டேஷன் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இரட்டை பிறழ்வு கொரோனா வைரஸ் திரிபால் மகாராஷ்டிர மாநிலத்தில், உள்ள கொரோனா  நோயாளிகளில் 50 முதல் 60 சதவிகிதம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இந்த இரட்டைப் பிறழ்வு திரிபு மனிதர்களை கடுமையாக பாதிக்கும் சில தன்மைகளைக்  கொண்டிருக்கிறது. பிரிட்டன் திரிபு பஞ்சாப் மாநிலத்தில் காணப்படுகிறது.
 
மகாராஷ்டிர திரிபு தற்போது ஆந்திர பிரதேசம், தெலங்கானா. கர்நாடகா போன்ற மாநிலங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா  மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இந்த திரிபால் பாதிக்கப்படுகிறார்கள்.
 
மற்ற கொரோனா வைரஸ் திரிபுகள் அனைத்தும் காணாமல் போய்விடும், இந்த திரிபினால் மட்டும் அனைவரும் பாதிக்கப்படலாம் என தோன்றுகிறது" என  பிபிசியிடம் கூறினார் கொரோனா கட்டுப்பாட்டு அறையின் முன்னாள் இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா.
 
இந்தியாவில் தற்போது பல கொரோனா வைரஸ் திரிபுகள் பரவிக் கொண்டிருக்கின்றன. அதில் சில திரிபுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின்  எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன. சில திரிபுகள் மிகக் குறைந்த அளவிலான நபர்களையே பாதிக்கின்றன.
 
"டபுள் மியூட்டேஷன் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இரட்டை பிறழ்வு கொரோனா வைரஸ் திரிபால் மகாராஷ்டிர மாநிலத்தில், உள்ள கொரோனா  நோயாளிகளில் 50 முதல் 60 சதவிகிதம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இந்த இரட்டைப் பிறழ்வு திரிபு மனிதர்களை கடுமையாக பாதிக்கும் சில தன்மைகளைக்  கொண்டிருக்கிறது. பிரிட்டன் திரிபு பஞ்சாப் மாநிலத்தில் காணப்படுகிறது.
 
மகாராஷ்டிர திரிபு தற்போது ஆந்திர பிரதேசம், தெலங்கானா. கர்நாடகா போன்ற மாநிலங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா  மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 20 சதவிகிதம் பேர் இந்த திரிபால் பாதிக்கப்படுகிறார்கள்.
 
மற்ற கொரோனா வைரஸ் திரிபுகள் அனைத்தும் காணாமல் போய்விடும், இந்த திரிபினால் மட்டும் அனைவரும் பாதிக்கப்படலாம் என தோன்றுகிறது" என  பிபிசியிடம் கூறினார் கொரோனா கட்டுப்பாட்டு அறையின் முன்னாள் இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா.
 
ஆந்திரப் பிரதேச திரிபு 1,000 மடங்கு அதிவேகமாக பரவுகிறதா?
 
"அது வெறுமனே ஒரு வதந்திதான். இந்த திரிபுக்கு அத்தனை முக்கியத்துவம் எதுவும் இல்லை. இந்தத் திரிபு பல மாதங்களுக்கு முன்பே உருவாகி காணாமல்  போய்விட்டது. தற்போது இந்த கொரோனா வைரஸ் திரிபால் ஒட்டுமொத்த தென்னிந்தியாவில் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையில் 5 சதவிகிதம்  பேர் கூட இல்லை. இந்த கொரோனா வைரஸ் திரிபு ஆயிரம் மடங்கு அதிவகமாக பரவுகிறது என கூறுவது முற்றிலும் தவறு" என்கிறார் ராகேஷ்.
 
மேலும் இந்த திரிபுக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மரணத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என கூறுகிறார் ராகேஷ். உண்மையில்  மகாராஷ்டிராவில் பரவிக் கொண்டிருக்கும் இரட்டை பிறழ்வு கொரோனா வைரஸ் திரிபும், பிரிட்டன் திரிபும் இதைவிட அதிவேகமாக பரவக்கூடியவை.
 
கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களில் பரவும் வேகத்தை நாம் பார்க்க கூடாது. அது மனிதர்கள் மத்தியில் பரவும் வேகத்தைத்தான் பார்க்கவேண்டும்  என்கிறார் ராகேஷ்.
 
"சோதனைக் கூடங்களில் திசு வளர்ப்பு முறையில் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவும். ஆனால் அதே வேகத்தில் மனிதர்கள் உடலில் பரவாது. இதற்குக்  காரணம் சோதனைக் கூடங்களில் வைரஸை எதிர்த்துப் போட்டியிட எந்த போட்டியாளரும் இருக்கமட்டார்கள். அதாவது மனித உடலில் காணப்படும் நோய் எதிர்ப்பு  மண்டலம் பரிசோதனைக் கூடங்களில் இருக்காது. எனவே சோதனைக் கூடங்களில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவும். எனவே சோதனைக் கூடங்களில்  பரவும் அளவுக்கு மனிதர்கள் மத்தியிலும் பரவும் என கருதக் கூடாது" என்கிறார் ராகேஷ்.
 
'ஆந்திரப் பிரதேச கொரோனா வைரஸ் திரிபு' என்கிற சொல் அரசியல் ஆக்கப்பட்டு வருகிறது, அது அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஆந்திரப் பிரதேச மாநில அரசு இந்த  கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஒரு விளக்கத்தையும் வெளியிட்டது.
 
"N440k கொரோனா வைரஸ் திரிபு குறித்து அச்சப்பட எதுவும் இல்லை. அத்திரிபு 2020 ஜூன் - ஜூலை காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த திரிபு கடந்த  டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பரவி, மார்ச் 2021ல் காணாமல் போய்விட்டது. இந்த கொரோனா வைரஸ் திரிபு 3 மாநிலங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் பரவல் மிகக் குறைவாகவே இருக்கிறது.
 
ஒரு வேளை இந்த கொரோனா வைரஸ் திரிபு ஆபத்தானது என்றால் உலக சுகாதார அமைப்பு இது குறித்து பேசி இருக்கும். ஐ.சி.எம்.ஆர் அமைப்பு இந்த கொரோனா  வைரஸ் திரிபு ஆபத்தானது என அறிவித்து இருக்கும். எனவே இது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை" என ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கொரோனா  கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் ஜவஹர் ரெட்டி கூறினார்.
 
N440k மரபணு பிறழ்வு அத்தனை கடுமையானது அல்ல என கொரோனா குறித்த தரவுகளை பராமரித்து வரும் பல்வேறு அமைப்புகள் மற்றும் உலகின் பல  முக்கிய அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
 
"N440k கொரோனா வைரஸ் திரிபு கடந்த ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் கர்னூல் மாவட்டத்தில் இருந்து நாடு முழுக்க பரவியது. இப்போது அல்ல" என கூறினார்  மருத்துவர் மாடாலா கிரண்.
 
மகாராஷ்டிர கொரோனா வைரஸ் திரிபு ஆபத்தானதா?
தற்போது மகாராஷ்டிர கொரோனா வைரஸ் திரிபு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் அதிவேகமாகப் பரவி வருகிறது. மகாராஷ்டிர கொரோனா  வைரஸ் திரிபை இரட்டை பிறழ்வு (L452R/E484Q) கொண்ட திரிபு என்கிறோம். மகாராஷ்டிர திரிபில் காணப்படும் இந்த இரட்டைப் பிறழ்வு தீவிரமானதாக  இருக்கிறது.
 
"மகாராஷ்டிர கொரோனா வைரஸ் திரிபில் காணப்படும் இரண்டு மரபணு பிறழ்வுகளும் மனித உடலில் இருக்கும் ஏசிஇ2 உடன் ஒரு வலுவான இணைப்பை உண்டாக்குகிறது. எனவே இந்த கொரோனா வைரஸ் திரிபு கடுமையான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது" என்கிறார் மருத்துவர் கிரண்.
 
மற்றொருபுறம் ஆந்திராவின் முக்கிய நகரங்களில் ஒன்றான விசாகப்பட்டினத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து  வருகிறது.
 
"ஒருவர் உடலில் நோய் உண்டாகும் காலமும் கணிசமாக குறைந்திருக்கிறது. முன்பு ஏழு நாட்களாக இருந்த நோய் உண்டாகும் காலம், தற்போது மூன்று நாட்களாக  குறைந்து இருக்கிறது. நோயாளிகளுக்கு இருமல் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் மீதும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் தாக்கம் கடுமையாக இருக்கிறது. இதே போன்ற சூழல் அடுத்த இரண்டு மாதங்களுக்கு நிலவலாம்," என் ஆந்திர மருத்துவ கல்லூரியின்  முதல்வர் மருத்துவர் சுதாகர்.
 
இருப்பினும் விசாகப்பட்டினத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மகாராஷ்டிர கொரோனா வைரஸ் திரிபு தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஜிஐஎஸ்ஏஐடி அமைப்பின் தரவுகளை காணும் போது  விசாகப்பட்டினத்தில் மகாராஷ்டிர கொரோனா வைரஸ் திரிபு மற்றும் ஏ2ஏ என்கிற கொரோனா வைரஸ் திரிபும் இருப்பது தெளிவாக தெரிகிறது.
 
"விசாகப்பட்டினத்தில் நாங்கள் பரிசோதித்த 36 மாதிரிகளில் 33 சதவிகிதம் பேர் மகாராஷ்டிர கொரோனா வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. N440k கொரோனா வைரஸ் திரிபால் 5 சதவிகிதம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏடுஏ கொரோனா வைரஸ் பாதிப்பால் 62% பேர் பாதிக்கப்பட்டு  இருக்கிறார்கள். தென்னாபிரிக்கா, பிரேசில், பிரிட்டன் கொரோனா வைரஸ் திரிபுகள் விசாகப்பட்டினத்தில் பரவவில்லை" என்கிறார் மருத்துவர் கிரண்.
 
புதிதாக கொரோனா வைரஸ் திரிபுகள் வருவதை தடுக்க முடியாதா?
 
கொரோனா வைரஸ் மாற்றம் அடையும்போது புதிய பிரச்னைகளும் உருவாகின்றன. கொரோனா வைரஸில் மரபணு பிறழ்வு நடைபெறவில்லை எனில் புதிதாக  கொரோனா வைரஸ் திரிபுகள் உருவாகவில்லை எனில் எந்தவித பிரச்னையும் இல்லை. எனவே கொரோனா வைரஸ் மரபணு பிறழ்வுகள் நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? "எந்தவித மருந்தோ, தடுப்பு ஊசியோ வைரஸின் மரபணு பிறழ்வைத் தடுக்க முடியாது. மனிதர்கள் மட்டுமே அதை தடுக்க முடியும்" என்கிறார்  ராகேஷ்.
 
அது எப்படி சாத்தியமாகும்?
ஒருவர் உடலில் மரபணு பிறழ்வை மேற்கொள்ளும் வைரஸ், மற்றொருவருக்கு பரவும் போது, அவரது உடலிலும் மரபணு பிறழ்வை மேற்கொள்கிறது. இதில் யாரிடமிருந்து கொரோனா வைரஸ் மற்றொருவருக்கு பரவுகிறதோ அவர் தன்னிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க போதுமான பாதுகாப்பு  நடவடிக்கைகளை எடுத்தால் கொரோனா வைரஸின் மரபணு பிறழ்வுகள் அந்த முதலாமவர் உடனேயே நின்று விடும்.
 
அப்படி கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவாமல் இருக்க முகக் கவசம் அணிவது தான் ஒரே வழி.
 
புதிய மரபணு பிறழ்வு கொண்ட கொரோனா வைரஸை எதிர்த்து தடுப்பூசிகள் செயல்படுமா?
"எல்லா கொரோனா வைரஸ் திரிபுகள் மற்றும் மரபுகளுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்படும் என உறுதியாக கூற முடியாது. இருப்பினும் இன்று மக்களுக்கு  செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகள் தற்போது பரவும் கொரோனா வைரஸின் அனைத்து திரிபுகள் மற்றும் மரபுகளை எதிர்த்து சிறப்பாக செயல்படுகின்றன"  என்கிறார் ராகேஷ்.
 
"இனி புதிதாக ஒரு கொரோனா வைரஸ் திரிபு வரலாம், அது அதிக ஆபத்தை கூட விளைவிக்கலாம். எனவே ஒரு புதிய கொரோனா வைரஸ் திரிப்பு உருவாகாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். புதிய கொரோனா வைரஸ் திரிபு உருவாகக் கூடாது என்றால் கொரோனா வைரஸ் பரவக் கூடாது என்று பொருள். கொரோனா  வைரஸ் யாருக்கும் பரவக் கூடாது என்றால் நாம் அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும் என்று பொருள்" என கூறினார் ராகேஷ் மிஸ்ரா.


இதில் மேலும் படிக்கவும் :