செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 21 மே 2022 (10:14 IST)

விமான டிக்கெட்: 15 லட்ச ரூபாய்க்காக தனியார் உதவியை எதிர்பார்க்கும் இலங்கை அரசு

Air ticket - Sri Lanka
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பில் போலிசாரிடம் எந்த நேரத்திலும் வாக்குமூலம் வழங்கத் தயார் என இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக லங்காஸ்ரீ இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.


நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்ததுடன், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் உடன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுபெற்றது.

மேலும், அரசாங்கத்திற்கு எதிராக ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை ஆகியவை முற்றுகையிடப்பட்டு மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 9ம் தேதி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது அரச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறைக்கான விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில்தான், இலங்கை பிரதமர் மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

15 லட்ச ரூபாய்க்காக தனியார் உதவியை எதிர்பார்க்கும் இலங்கை அரசு

இலங்கையிலிருந்து தடகள வீரர்களை, கொலம்பியாவில் நடக்க உள்ள, உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வீரர்களை கொலம்பியா அனுப்புவதற்கு ஆகும் விமான செலவான சுமார் 1.5 மில்லியன் (15 லட்சம்) ரூபாய்க்காக தனியாரின் உதவியை இலங்கை அரசு எதிர்பார்க்கிறது என்று `தி ஐலேண்ட் ஆன்லைன்` இணையத்தில் செய்தி வெளியியாகியுள்ளது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை, கொலம்பியாவின் காலி நகரில் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கு தகுதியான வீர்ரகளை அனுப்ப வேண்டும்.

அதேபோல, இலங்கையில் ஏற்கனவே மே 9ஆம் தேதி நடக்கவிருந்த தேசிய அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளும் ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த போட்டிகளும் ஜூன் 7முதல் 10 வரையிலான தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை நடத்தி, இதன்மூலமும் வீரர்களை தேர்வு செய்து சர்வதேச போட்டிக்களங்களுக்கு அனுப்ப வாய்ப்புண்டு.

ஆனால், தேர்வு செய்யப்பட்ட வீரர்களை அனுப்புவதற்கான செலவைக் கையாளுவதில் பொருளாதாரத்தில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேசும்போது "முதல் இரண்டு இடத்தில் இருக்கும் சிறந்த வீர்ரகள் இருவரை மட்டும், தங்கள் சொந்தப் பணத்தில் செல்ல அனுமதிப்ப என்பது, பணம் ஏற்பாடு செய்யமுடியாத அதேசமயம் தகுதியுடையவர்கள் இருக்கும்போது முறையன்று. எனவேதான் இதில் தனியாரின் உதவியை நாடுகிறோம் என்கிறார் இலங்கை தடகளப்பிரிவின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் என்று ஐலேண்ட் ஆன்லைன் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.