1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: ஞாயிறு, 25 நவம்பர் 2018 (12:48 IST)

நிறவெறிக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய 103 வயது பெண் மரணம்

நிறவெறிக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய 103 வயது பெண் மரணமடைந்துள்ளார்.

அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக சுமார் 70 வருடங்கள் போராடியவரும், 103 வயதில் அமெரிக்க கடலோரப்படையில் இணைந்து சாதனை படைத்த ஆப்பிரிக்க-அமெரிக்கருமான ஒலிவியா ஹுக்கர் உயிரிழந்தார்.

அமெரிக்காவில் இதுவரை நடந்த நிறவெறி கொண்ட தாக்குதல் சம்பவங்களிலேயே மோசமானதாக கருதப்படும், 300 கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்ட 1921ஆம் ஆண்டு நடந்த துல்சா நிகழ்விலிருந்து உயிர் தப்பித்த ஒலிவியா தொடர்ந்து கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நிறவெறிக்கு எதிராக போராடி வந்தார்.

"நீதி மற்றும் சமத்துவத்திற்காக ஓயாமல் ஒலிக்கும் குரல்" என்று ஒலியாவின் செயல்பாட்டை அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான பராக் ஒபாமா அழைத்தார்.