Daily Horoscope
✕

பழங்கால எகிப்து இடுகாட்டில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமப்பேழைகள்

Written By Sasikala
Updated: திங்கள், 21 செப்டம்பர் 2020 (09:58 IST)
எகிப்தில் உள்ள பழங்கால இடுகாடு ஒன்றில், 2500 ஆண்டுகளுக்கும் மேலாக புதைந்து கிடந்த 27 ஈமப்பேழைகளை தொல்பொருள் ஆய்வாளர்கள்  கண்டுபிடித்துள்ளனர்.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் தெற்கே உள்ள சக்காரா எனுமிடத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
 
இந்த மாதத் தொடக்கத்தில் ஏற்கனவே 13 ஈமப்பேழைகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
 
தற்போது மேலும் 14 ஈமப்பேழைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
இவ்வாறான ஈமப்பேழைகள் கண்டுபிடிக்கப்பட்டதில், இது அதிக எண்ணிக்கையிலானது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
 
வேலைப்பாடுகள் செய்யப்பட்ட, மரத்தாலான, நன்கு பாதுகாக்கப்பட்ட ஈமப் பேழைகள் மற்றும் பிற கலைப் பொருட்களின் படங்களையும் அவர்கள்  வெளியிட்டுள்ளார்கள்.
 
யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள சக்காரா 3,000 ஆண்டுகளுக்கு மேலாக இடுகாடாக உள்ளது.

எல்லாம் காட்டு

இனி Flying Squad பிடிச்சா பயமே இல்லை.. தொழில் முனைவோர்களுக்குப் பெரும் நிம்மதியளிக்கும் உத்தரவு..

சென்னையின் மூன்று முக்கிய பகுதிகளில் நவீன விளையாட்டு வசதிகள்.. மின்னணு டெண்டர் வெளியீடு..

போரூர் முதல் பூந்தமல்லி வரை இனி நோ டிராபிக்.. கீழே சாலை, நடுவில் மேம்பாலம், மேலே மெட்ரோ ரயில்..

காலம் காத்திருந்து பதில் சொல்லிவிட்டது.. விஜய் வந்தவுடன் எழுந்து வரவேற்ற ரஜினிகாந்த்...

அதிக நன்கொடை கொடுத்த இந்தியர்களில் முதலிடம்!.. அதானியை தாண்டிய ஷிவ் நாடார்

அடுத்த கட்டுரையில்
Show comments