செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2020 (13:50 IST)

எகிப்து மம்மி: 3000 ஆண்டுகளுக்கு பிறகு உருவாக்கப்பட்ட பூசாரியின் குரல்

எகிப்திய பூசாரி ஒருவரின் மம்மியைக் கொண்டு, அவரது குரலை 3,000 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உருவாக்கியுள்ளனர் விஞ்ஞானிகள்.
 
நெஸ்யமன்னின் என்னும் அந்த பூசாரியின் குரல் செயற்கை குரல் வளையங்கள்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
 
இந்த மதகுரு கி.மு 1099 - 1069 காலக்கட்டத்தில் வாழ்ந்தவர். பாடல்கள் பாடுதல் உள்ளிட்ட மதச்சடங்குகள் செய்ய அவரின் குரல் வலிமையானதாக இருந்திருக்கும்.
 
நெஸ்யமன்னின் பேச்சுக்குழல் ஸ்கேன் செய்யப்பட்டு 3டி அமைப்பில் செயற்கையாக உருவாக்கப்பட்டது.
 
செயற்கை பேச்சுக்குழல் மற்றும் குரல்வளை அமைப்பைக் கொண்டு விஞ்ஞானிகள் நெஸ்யமன்னின் குரலை உருவாக்கினர்.