ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Updated : திங்கள், 14 ஜனவரி 2019 (18:12 IST)

விருச்சிகம் - தை மாதப் பலன்கள்

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை) - கிரகநிலை: ராசியில் சந்திரன்  -  தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  புதன், சுக்ரன்,  சனி  - தைரிய, வீர்ய ஸ்தானத்தில் கேது, சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - அயன, சயன, போக ஸ்தானத்தில் செவ்வாய், குரு ஆகிய  கிரகங்கள் வலம் வருகின்றன.
 
பலன்: இந்த மாதம் உங்களுக்கு எதிர்ப்புகள் அகலும். பகை விலகி எதிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தகராறுகள்  வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.
 
தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண்  அலைச்சலும் இருக்கும். வீண் பகை உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. பணவரத்து எதிர்பார்த்ததை விட குறையக் கூடும். கடன்  விஷயங்களை தள்ளிபோடுவது நல்லது. புதிய நபர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும்போது கவனம் தேவை.
 
குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகளுக்காக  அலைய வேண்டி இருக்கும். மகிழ்ச்சி உண்டாகும்.
 
பெண்களுக்கு அடுத்தவர்கள் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவு ஏற்படலாம்.  எதிலும் கவனமாக இருப்பது நல்லது.
 
கலைத்துறையினருக்கு பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும். பயணங்கள் செல்ல நேரலாம்.  வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும்.
 
அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பண வரவு இருக்கும். தேவையான வசதிகள்  கிடைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம்  சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். பழைய சிக்கல்கள் தீர்வதில்  தாமதம் ஏற்படும்.
 
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்..
 
விசாகம்: இந்த மாதம் மாணவர்கள் உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு  உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும்.  சகோதரர் வழியில் நன்மை உண்டாகும்.
 
அனுஷம்: இந்த மாதம் மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை  கிடைக்க பெறுவார்கள். லாபம் கூடும்.  எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக  பணிகளை கவனிப்பார்கள்.
 
கேட்டை: இந்த மாதம் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள்.
 
பரிகாரம்: செவ்வாய்கிழமையில் நவகிரகத்தில் செவ்வாய்க்கு தீபம் ஏற்றி வணங்க எல்லா காரியங்களும் வெற்றி பெறும். மனத் துணிவு  உண்டாகும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி19, 20
அதிர்ஷ்ட தினங்கள்: ஜனவரி 14; பிப்ரவரி 9, 10.