செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Updated : திங்கள், 14 ஜனவரி 2019 (16:28 IST)

கன்னி - தை மாதப் பலன்கள்

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்) - கிரகநிலை: தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  செவ்வாய், குரு  - தைரிய,  வீர்ய ஸ்தானத்தில் சந்திரன்  - சுக ஸ்தானத்தில் புதன், சுக்ரன், சனி -  பஞ்சம பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் கேது, சூர்யன் - லாப  ஸ்தானத்தில் ராகு ஆகிய கிரகங்கள் வலம் வருகின்றன.
 
பலன்: இந்த மாதம் அறிவுத் திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் என்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும்.  இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக இருப்பது நல்லது.  மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வீடு மனை ஆகியவற்றை  வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கும்.
 
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும்.  வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  முன்னேற்றம் உண்டாகும். பணவரத்தும் திருப்தி தரும். மேலிடம் உங்களிடம் நல்ல அணுகுமுறையை நீட்டிக்கும்.
 
குடும்பத்தில்  எதைப் பேசுவதாக இருந்தாலும் பேச்சில் நிதானம் தேவை. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை.  குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது.
 
பெண்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் எதையும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். கடின முயற்சியின் பேரிலேயே காரியங்கள் பெற்றி  பெறும்.
 
கலைத்துறையினருக்கு காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத செலவு உண்டாகும். சொத்து மனை சம்பந்தமான  காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும்.
 
அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து  பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும்.
 
மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும். மேல்படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சக மாணவர்களின்  விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.
 
உத்திரம்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை  ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. தாய், தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கை அவசியம்.  
 
ஹஸ்தம்: இந்த மாதம் பெண்கள் எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. பயணங்கள் செல்லும் போது  கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பதும் எதிலும் மெத்தனமாக  செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.
 
சித்திரை: இந்த மாதம் காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான  பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும்.
 
பரிகாரம்: புதன்கிழமையில் ஆஞ்சனேயரை வெண்ணை சாற்றி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனோ தைரியம் கூடும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி  15, 16; பிப்ரவரி 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி 4, 5.