மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) - கிரகநிலை: தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ,புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு - ரண, ருண ரோக, சத்ரு ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் புதன், சுக்ரன், சனி - அஷ்டம ஸ்தானத்தில் கேது, சூர்யன் ஆகிய கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்: இந்த மாதம் சின்ன விஷயங்களுக்கு கூட உங்களுக்கு கோபம் வரலாம். எனவே கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்கள் சாதகமாக நடைபெறும். எதிர்பாராத பணதேவை உண்டாகும். அதனை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். எதிலும் இழுபறியான நிலை காணப்படும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம் கவனம் தேவை.
தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததை விட குறைவான லாபம் தரும். ஆனால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங்களில் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும்.
குடும்பத்தில் இருந்த மன வருத்தங்கள் மாறி சுமூகமான நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். திருமண முயற்சி கைகூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
குடும்பத்தில் இருப்பவர்களின் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கள். வீண் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நன்மை தரும். உறவினர் நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை.
பெண்களுக்கு பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையை செய்து முடிக்க காலதாமதமாகலாம். வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
கலைத்துறையினருக்கு பாதுகாப்பு அவசியம். பொருள் வரவில் குறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனினும் வேலை செய்யும் இடத்தில் சிறு சிறு பிணக்குகள் வந்து மறையும். கோபம் கலந்த வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நன்று.
அரசியல்துறையினருக்கு பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். வேதாந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்..
மிருகசீருஷம்: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும்.
திருவாதிரை: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். பெண்கள் அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது.
புனர்பூசம்: இந்த மாதம் பண விவகாரங்களில் கவனம் தேவை. மாணவர்கள் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
பரிகாரம்: புதன்கிழமையில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்குவது வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், சுக்கிரன்
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்: ஜனவரி 28, 29.