புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Updated : திங்கள், 14 ஜனவரி 2019 (18:22 IST)

மீனம் - தை மாதப் பலன்கள்

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) - கிரகநிலை: பஞ்சம பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், குரு - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் புதன், சுக்ரன், சனி - லாப ஸ்தானத்தில் கேது, சூர்யன்ஆகிய கிரகங்கள்  வலம் வருகின்றன.
 
பலன்: இந்த மாதம் நல்ல பலன்களைத் தரும். குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.
 
தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப் பீர்கள். எண்ணப்படி எல்லாம் நடக்கும். உங்களது செயல்களுக்கு தடை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகி  விடுவார்கள். பணவரத்து கூடும். தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
 
பெண்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்த்த தகவல் தாமதப்படலாம்.
 
கலைத்துறையினருக்கு யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். சிலருடன் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
 
அரசியல்துறையினருக்கு நினைக்கும் காரியங்கள் தள்ளிபோகலாம். வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். மேலிடத்திடம் நெருக்கம்  அதிகரிக்கும். மனம் மகிழும் காரியங்கள் நடக்கும்.
 
மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கவனமாக கேட்டு அதன்படி நடப்பது வெற்றிக்கு உதவும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
 
பூரட்டாதி: இந்த மாதம் வீண்செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிருப்தி உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய்  உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.
 
உத்திரட்டாதி: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல்  பணியாற்ற  வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர்  மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.
 
ரேவதி: இந்த மாதம் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம்.  பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும்.  உறவினர்களிடம் கவனம் தேவை.
 
பரிகாரம்: நவக்கிரக குருவை வியாழக்கிழமையில் வணங்கி வர வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மன அமைதி ஏற்படும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஜனவரி 28, 29
அதிர்ஷ்ட தினங்கள்: ஜனவரி 21, 22.