வியாழன், 2 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: வெள்ளி, 29 ஜூன் 2018 (20:10 IST)

ஜூலை மாத ராசிபலன்கள் - கடகம்

கடகம் ராசியினருக்கு ஜூலை மாதத்திற்கான ராசிபலன் கொடுக்கப்பட்டுள்ளது.


நளினமாக பேசி காரியங்களை சாதிக்கும் கடக ராசி அன்பர்களே இந்த மாதம் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தேவையற்ற மனகவலை உண்டாகும். வீண் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நலம் தரும்.

தொழில், வியாபாரம் சுமாராக நடக்கும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை  செய்து முடித்து நன்மை பெறுவீர்கள்.

குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே  மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை காதில் வாங்காதவர்போல் இருப்பார்கள் எனவே எல்லோரையும் அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். புதியதாக மனை வாகனம் வாங்குவதற்கு அனுகூலமாக கைக்கு பணம் வந்து சேரும்.

கலைத்துறையினர் கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.
பெண்களுக்கு நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும்.

மாணவர்கள் சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு பாடங்களை நன்கு படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.

 
புனர்பூசம்:
இந்த மாதம் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். எந்த விஷயமாக இருந்தாலும் முடிவெடுக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். மனதில் குழப்பநிலை நீடிக்கும். மறைந்திருக்கும் எதிரிகளால் தொல்லை ஏற்பட்டாலும் அவர்களால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிட முடியாது.

 
பூசம்:
இந்த மாதம் கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றிகளை குவிக்க முடியும். கணவன்-மனைவி உறவு விரிசல் காணும்.  பணப் பற்றாக்குறையால் ,குடும்பத்தாரின் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் போகும். இதனால் குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாக நேரும். உங்கள் ஆரோக்கியமும் படுத்திக்கொண்டிருக்கும். மருத்துவச் செலவுகள் எகிறும்.

 
ஆயில்யம்:
இந்த மாதம் உறவுகள் பகையாகும். எதிரிகளின் திட்டம் உங்களை வேதனைக்குள்ளாக்கும். அலுவலக வேலையில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை இருக்கும். உங்களிடம் குறை கண்டுபிடித்து உங்களுக்கு தண்டனை தருவார்கள். வேண்டாத இடமாற்றம் வரும்.  உடன் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பும் இல்லாமல் போகும்.

 
பரிகாரம்: மாரியம்மனை திங்கட்கிழமைகளில் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் தீரும். மனநிம்மதி உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30, 31
அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21, 22
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - திங்கள் - வெள்ளி