ஜூலை 6ஆம் தேதி வெளியாகும் 'முரட்டு குத்து' நாயகியின் அடுத்த படம்

Last Modified வெள்ளி, 15 ஜூன் 2018 (11:43 IST)
சந்தானம் நடிப்பில் ஆனந்த் பால்கிய இயக்கிய 'சர்வர் சுந்தரம்' திரைப்படம் கடந்த ஆண்டே ரிலீசுக்கு தயாராகி ஒருசில ரிலீஸ் தேதிகளும் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒருசில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொண்டே இருந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் வரும் ஜூலை 6ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செஃப் வேடத்தில் சந்தானம் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வைபவி நடித்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியான அடல்ட் காமெடி படமான 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானம், வைபவி, நாகேஷ் பேரன் பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தை கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு பிகே வர்மா ஒளிப்பதிவும், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :