1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
  4. January month astrology prediction

ஜனவரி 2023 மாத ஜோதிடப் பலன்கள்: கும்பம்

ஜனவரி 2022
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)


கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சந்திரன், ராகு - சுக ஸ்தானத்தில்  செவ்வாய் (வ) - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - விரைய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்:
08-01-2023 அன்று லாப ஸ்தானத்தில் இருக்கும் புதன் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
13-01-2023 அன்று சுக ஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
15-01-2023 அன்று சூரிய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
23-01-2023 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

பலன்:
வீரத்தை விட விவேகமே சிறந்தது என்பதை மனதில் கொண்டு எதையும் சாதிக்கும் திறன் உடைய கும்பராசியினரே இந்த மாதம் இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள். ஆனால் ராசியில் இருக்கும் கேதுவால் திடீர் மனக்குழப்பம் வரும். அதை கட்டுப்படுத்துவது நல்லது. அலைச்சலை தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்து கொள்ள முடியும். வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். ஆனால் வேலை செய்பவர்களிடம் கோபப்படாமல் தட்டி கொடுத்து வேலை வாங்குவது நன்மையை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணியின் காரணமாக சோர்வு உண்டாகலாம்.

குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.

பெண்களுக்கு திடீர் என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது. திறமையை கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும்.

கலைத்துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.

அரசியல் துறையினருக்கு தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. மனோதிடம் உண்டாகும். கடன்கள், நோய்கள் தீரும். விவாதம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.

மாணவர்களுக்கு கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். பாடங்களை நன்கு படித்து பாராட்டு பெறுவீர்கள்.

அவிட்டம்:
இந்த மாதம் பிரிந்துசென்ற தம்பதியினர் ஒன்றுசேர்வார்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. மருத்துவத் தொழில்புரிவோருக்கு அதிக வருவாய் வரும் மாதம். சோதனைகள் வெற்றியாக மாறும்.

சதயம்:
இந்த மாதம் காரியங்கள் அனைத்தும் கைகூடும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். மனஅடக்கம் பெற தியானம் செய்யுங்கள். படிப்பில் நாட்டம் கூடும். பெற்றோர்கள், பிள்ளைகள் விரும்பியதை  வாங்கிக்கொடுப்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வந்துசேரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும்.

பூரட்டாதி:
இந்த மாதம் கல்வியில் புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றமோ அல்லது பணி நிரந்தரமோ ஏற்படலாம்.

பரிகாரம்: ஆஞ்சனேய கவசத்தை படித்து வருவதுடன் அநாதை இல்லங்களுக்கு சென்று தொண்டு செய்து வர மன குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள்  நன்கு நடந்து முடியும்.
சந்திராஷ்டம தேதி: 13, 14
அதிர்ஷ்ட தேதி: 5, 6, 7
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஜனவரி 2023 மாத ஜோதிடப் பலன்கள்: மீனம்