திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (15:32 IST)

ஜனவரி 2022 - புத்தாண்டு பலன்: மேஷம்

மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்)

 
மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் மறைந்திருந்தாலும் அவரின் பார்வை மூலம் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். ராசிநாதன் ஆட்சியாக இருப்பதால் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். அஷ்டமத்தி சனி இருப்பதால் சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது.  திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.
 
தொழில் ஸ்தானத்தில் தன ஸப்தாமதிபதி சுக்கிரன் சனியுடன் இணைந்து அலங்கரிக்கிறார். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். நல்ல பெயர் கிடைக்கப் பெறுவீர்கள்.
 
குடும்ப ஸ்தானத்தை ராசிநாதன் பார்த்தாலும் குடும்ப ஸ்தானத்திற்கு சுக்கிரன் திரிகோணம் பெறுகிறார். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள்  நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.
 
பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். 
 
கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும். 
 
அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும்  நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும்  சந்திக்க நேரலாம்.  
 
மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை அடைய கூடுதல்  கவனத்துடன் படிப்பது அவசியம்.

அஸ்வினி:
தொழில் வியாபாரம் சிறப்படையும். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.
 
பரணி:
குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள்.  தம்பதிகளுக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகளுக்கு மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும்.
 
கார்த்திகை 1:
எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் காரியதாமதம் உண்டாகலாம். குடும்பத்தில் அமைதி ஏற்படும். லாப நஷ்டங்களையும் அறிந்து அதற்கேற்றவாறு செயல்படுவீர்கள். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
 
பரிகாரம்: செவ்வாய்கிழமையில் நவகிரகத்தில் செவ்வாயை அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வெள்ளி
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22