பிப்ரவரி மாத பலன் - மீனம்

வியாழன், 31 ஜனவரி 2019 (21:40 IST)

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)


கிரக நிலை:
ராசியில் செவ்வாய் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராஹூ - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
உழைப்புக்கு அஞ்சாத மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் நல்ல பலன்களைத் தரும். எதிர்ப்புகள் விலகும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.  கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை குறையாது. பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பதும் உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதும் மிகவும் நல்லது.

பெண்களுக்கு பணவரத்து கூடும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மனவருத்தம் ஏற்படலாம்.

கலைத்துறையினருக்கு வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

அரசியல்துறையினருக்கு ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

பூரட்டாதி 4 - ம் பாதம்:
இந்த மாதம் எந்தவொரு காரியத்தையும் முழுமையாகச் செய்துமுடிக்க இயலாதபடி தாமதநிலை உண்டாகும். எதிர்பார்க்கும் கடனுதவிகளும் தாமதப்படும். பலவகையில் நெருக்கடிகள் அதிகரிக்கும். குடும்பத்திலும் வீணான சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

உத்திரட்டாதி:
இந்த மாதம் எவ்வளவுதான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்க முடியாத நிலை உண்டாகும். உற்றார்- உறவினர்களே தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். கடன்காரர்களும் மிகவும் தொல்லை கொடுப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து உடல்நிலை சோர்வடையும்.

ரேவதி:
இந்த மாதம் நன்மை, தீமை கலந்த பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்திலிருந்த மருத்துவச் செலவுகள் படிப்படியாகக் குறையும். உற்றார்- உறவினர்கள் தக்கசமயத்தில் உதவுவார்கள். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொள்வதால் கடன்களைத் தவிர்க்கலாம்.

பரிகாரம்: சிவபெருமானை வணங்கி வர எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: 18, 19


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
இதில் மேலும் படிக்கவும் :