பிப்ரவரி மாத பலன் - தனுசு

வியாழன், 31 ஜனவரி 2019 (21:30 IST)

தனுசு (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)


கிரக நிலை:
ராசியில் சந்திரன், சுக்ரன், சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - சுகஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
தன்னிச்சையாக செயல்படும் தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும்.  பணவரத்தை அதிகப்படுத்தும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம்.

குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள்.

பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம்.

கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது

அரசியல்துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாக கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.

மூலம்:
இந்த மாதம் நண்பர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றியினைப் பெறுவீர்கள். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் எந்தக் காரியத்திலும் எளிதாக ஈடுபடமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.

பூராடம்:
இந்த மாதம் சிலருக்கு வீடு, மனை வாங்கும் கனவுகளும் நனவாகும். கடன்கள் அனைத்தும் குறையும். உற்றார்-உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பணம் பலவழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும்.

உத்திராடம் 1 -பாதம்:
இந்த மாதம் கொடுக்கல்-வாங்கலிலும் எதிர்பார்த்த லாபம் அமையும். பெரிய மனிதர்களின் நட்பு அனுகூலப்பலனை உண்டாக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். 

பரிகாரம்: நவக்கிரஹ குருவை வியாழக்கிழமைகளில் வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி சுகம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
இதில் மேலும் படிக்கவும் :