பிப்ரவரி மாத பலன் - மிதுனம்

வியாழன், 31 ஜனவரி 2019 (21:07 IST)

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்  திருவாதிரை,  புனர்பூசம் 1, 2, 3 பாதம்)


கிரக நிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன், சனி - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன், புதன், கேது - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள்.  காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்தை அதிகப்படுத்தும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களின் ஆலோசனை கேட்டு எதையும் செய்வார்கள். கணவன், மனைவிக்கிடையே  இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது.

பெண்களுக்கு எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங் களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பட்ட சிரமங்கள் குறையும். வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும்.

அரசியல்துறையினருக்கு அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எடுத்துக் கொண்ட வேலைகளில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம்.

மாணவர்களுக்கு  கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மனதில் இருந்த கவலை நீங்கும்.

மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். சிலருக்கு அசையா சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் வீண் செலவுகளை சந்திக்க நேரிடும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்.

திருவாதிரை:
இந்த மாதம் எல்லாப் பணிகளிலும் புதுத்தெம்புடனும், பொலிவுடனும் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பயணங்களும் அதன்மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்:
இந்த மாதம் உங்களின் உடல் ஆரோக்கியம் வெகுசிறப்பாக இருக்கும். இதுவரை இருந்துவந்த உடல்நலக் கோளாறுகள் யாவும் படிப்படியாக விலகும். மனைவி, பிள்ளைகளும் சுபிட்சமாக அமைவதால் மருத்துவச் செலவுகள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர துன்பங்கள் விலகி இன்பங்கள் தேடி வரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: 4, 5
அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
இதில் மேலும் படிக்கவும் :