திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2019 (15:41 IST)

செப்டம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: ரிஷபம்

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம்,  ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

கிரகநிலை:
குடும்ப ஸ்தானத்தில்  ராஹூ - சுக ஸ்தானத்தில்  சூர்யன், செவ்வாய், புதன், சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில்  சந்திரன் - களத்திர ஸ்தானத்தில்  குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
உறவினர்களிடத்தில் பக்குவமாக நடந்து கொள்ளும் ரிஷப ராசியினரே, இந்த மாதம் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். பிள்ளைகளுக்காக கூடுதலாக பாடுபட வேண்டி இருக்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும். கடன் பிரச்சனைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும்.

உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும்.

பெண்களுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சி களில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும்.

கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை.. தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும்.

அரசியல்துறையினருக்கு பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

மாணவர்களுக்கு மனதில் இருந்த வீண் பயம் அகலும். கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள்.

கார்த்திகை - 2, 3, 4:
இந்த மாதம் உங்களின் பெயர், புகழ் யாவும் உயரக்கூடிய காலமாகும். எதிர்பார்த்த கௌரவப் பதவிகள்கூட கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் தொண்டர்களின் ஆதரவும் சிறப்பாக அமையும்.

ரோகினி:
இந்த மாதம் வெளியூர், வெளிநாட்டுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். மறைமுக வருவாய்கள் அதிகரிக்கும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.   கொடுக்கல்-வாங்கலிலும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும்.

மிருகசீரிஷம் - 1, 2:
இந்த மாதம் குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். உற்றார்- உறவினர்களின் வருகை கடந்தகால பிரச்சினைகளை மறந்து ஒற்றுமையை நிலைநாட்டும்.

பரிகாரம்:  ஆதிபராசக்தியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 8, 9,
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 29, 30